Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / இலங்கையில் இடம்பெயரும் 5 மாவட்ட மக்கள்
https://www.facebook.com/esoftjaffna/

இலங்கையில் இடம்பெயரும் 5 மாவட்ட மக்கள்

இரத்தினபுரி, எஹெலியகொட பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்த விடுத்துள்ளது.

அதிக மழை காரணமாக இந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அகலவத்தை, வலல்லாவிட, பாலிந்தநுவர, இங்கிரிய மற்றும் பதுரெலிய ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இரத்தினபுரியில் களுகங்கை நீர் மட்டம் பாரியளவில் உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இரத்தினபுரியில் கொடி கமுவ, பண்டரவத்தை , படுகெதர உள்ளிட்ட சில பிர சேசங்களில் வீடுகள் வெள்ளத்தில் பாதித்தப்பட்டு அம்மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சுமந்த வண்ணம் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், கொழும்பு – அவிஸ்ஸாவளை பிரதான வீதி, புவக்பிட்டிய பகுதி நீரில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு பாதையில் வெள்ள நீர் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த பாதையின் ஊடாக சிறிய வாகனங்களால் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அதேபோன்று வத்தளை நகரின் பல பகுதிகளிலும், கொலன்னாவை – நாகஹமுல்லை பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களனி – வனவாசல பகுதியிலும் சில வீடுகள் நீரில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கொழும்பு – இரத்தினபுரி வீதியின் இரண்டு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

புவக்பிட்டிய, எஹியகொட பரகடுவ பகுதிகளே இவ்வாறு வெள்ளித்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மேல், சம்பரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிலீட்டர் மழை வீழ்ச்சி கிடைக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே, ஊவா மாகாணம் அதுபோல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 100 மில்லிலீட்டர் வரையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு மற்றும் கிழக்கு திசையில் தேன்றியுள்ள வாயுகோள குழப்பநிலை காரணமாக கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 மீற்றர் வரையில் அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, களுத்துறை பிரதேசம் மற்றும் ஆற்று பகுதிகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மழையுடன் கூடிய காலநிலையில் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.