Breaking News
Home / latest-update / இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான  டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
கட்டாக்கில் நடந்த முதல் ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் 88 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும் தனது அதிரடியை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று ‘ஒயிட்வாஷ்’ செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
ஆனாலும், முதல் 2 போட்டியில் தோற்ற இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக மிகவும் கடுமையாக போராடும் என தெரிகிறது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …