Breaking News
Home / latest-update / இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது மகிழ்ச்சி: வீராட்கோலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது மகிழ்ச்சி: வீராட்கோலி

இலங்கைக்கு எதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது மகிழ்ச்சி: வீராட்கோலி

கொழும்பு:

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. முதலில் விளையாடி இலங்கை 49.4 ஓவரில் 238 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

அடுத்து விளையாடிய இந்தியா 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் வீராட் கோலி சதம் (110 ரன்) அடித்தார். இத்தொடரில் அவர் அடித்த 2-வது சதமாகும். இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது அற்புதமானது. ஒருநாள் போட்டி சவால் ஆனது என்பதை எப்போதும் அறிவோம். எங்களுக்கு நிறைவான தொடராக அமைந்து இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இதற்கு முன்பு நாங்கள் ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ந்து 2 ஆட்டங்கள் வென்றது இல்லை. தற்போது தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்று இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கேப்டன் உபுல் தரங்கா கூறுகையில், இது எங்களுக்கு இக்கட்டான நேரம். சீக்கிரத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். மேத்யூஸ்-திரிமானே நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் 270 ரன் வரை எடுக்கும் நிலையில் இருந்தோம். துரதிருஷ்டவசமாக மீண்டும் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அனைத்து துறையிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு கேப்டனாக நாங்கள் எங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இரு அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற (5-ந்தேதி) கொழும்பில் நடக்கிறது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …