Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (19-09-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம்
செப்டம்பர் 19, 2018

இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இருக்கும். குடும்பப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். ஆன்மிக சிந்தனை உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாகும்.

ரிஷபம்
செப்டம்பர் 19, 2018

உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வீண் மனக்குழப்பங்கள் உங்களை சிரமப்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். அனுசரிப்பது உத்தமம். ஆன்மிக சிந்தனை நன்மை பயக்கும்.

மிதுனம்
செப்டம்பர் 19, 2018

உங்கள் செயல்பாடுகளில் இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். பணவரவுகள் உங்கள் சிரமங்களை குறைக்கும். சுபகாரிய முயற்சி முன்னேற்றமாகும். பயண காரியம் அனுகூலமாகும். குடும்பப்பணிகளில் சிறப்பு கூடும்.

கடகம்
செப்டம்பர் 19, 2018

செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அத்தியாவசியத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். நட்பு ரீதியாக உங்கள் செயல்பாடு பாராட்டு பெறும்.

சிம்மம்
செப்டம்பர் 19, 2018

உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். குழந்தைகள் பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். கடன் சுமை குறையும். செய்யும் தொழிலில் சிறப்பு கூடும்.

கன்னி
செப்டம்பர் 19, 2018

இன்று உங்கள் செயல்பாடுகள் பாராட்டு பெறும். பேச்சுக்கு மதிப்பு கூடும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றம் பெறும். தொழில் ரீதியான கவுரவம், பண வரவுகள் கூடும். சுபகாரிய முயற்சி அனுகூலம் பெறும். உறவுகள் மேம்படும்.

துலாம்
செப்டம்பர் 19, 2018

இன்று தேவைக்கேற்ப பணவரவுகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் வகையில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்
செப்டம்பர் 19, 2018

இன்று உங்களுக்கு தெய்வபலம் பக்கபலமாக இருக்கும். ஆன்மிக சிந்தனை நன்மை தரும். சிக்கலான பிரச்னையில் துணிச்சலாக எடுக்கும் முடிவு நற்பலன் தரும். சுபச்செலவினம் உண்டு. தர்ம சிந்தனை மேலோங்கி இருக்கும்.

தனுசு
செப்டம்பர் 19, 2018

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். அயனசயனபோகம் உண்டு. கடன் கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை தேவை. தொழில் ரீதியான விஷயங்கள் லாபகரமாக இருக்கும். உறவினர்களிடம் முன்னெச்சரிக்கை தேவை.

மகரம்
செப்டம்பர் 19, 2018

இன்று உங்களுக்கு செய்யும் தொழிலில் சிரமங்கள் வரும். பெண்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். ஞாபகமறதி தொல்லை இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். திட்டமிட்டு செயல்படுங்கள்.

கும்பம்
செப்டம்பர் 19, 2018

தொழில் ரீதியான முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் திட்டமிட்டப்படி காரிய சாதனை புரிவீர்கள். லாபகரமான விஷயங்கள் அனுகூலமாகும். உங்கள் புத்திசாலித்தனமான பேச்சு, செயல்பாடு உங்களுக்கு பெருமை சேர்க்கும்.

மீனம்
செப்டம்பர் 19, 2018

செய்யும் தொழிலில் லாபகரமான சூழ்நிலை வரும். எதிர்பாராத செலவினங்கள் வரும். வளர்ப்புப்பிராணிகள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். உங்கள் தேக ஆரோக்கிய்ததில் சிறுசிறு தொல்லை வரும். குடும்பப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

Check Also

‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது …