Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (14-05-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (14-05-2018)

மேஷம்
மே 14, 2018

பொருளாதார சூழ்நிலைகள் திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் தீரும். செய்யும் தொழிலில் சுமுகமான சுழல் இருக்கும். நீங்கள் முக்கியமாக எதிர்பார்த்த காரியத்தில் எதிர்பாராத தடை வரும். திட்டமிடல் அவசியம்.

ரிஷபம்
மே 14, 2018

தேக ஆரோக்யம் பலம் பெறும். கடன் தீரும். எதிர்பார்க்கும் விஷயங்கள் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு. பணப்புழக்கம், வரவினங்கள் உண்டு. சுகபோஜனம் நல்விருந்து சுகபோகமாக இருக்கும்.

மிதுனம்
மே 14, 2018

பொருளாதார சூழ்நிலை சுபிட்ஷமாக இருக்கும். நெருக்கமானவர்களின் பிரிவு மனவருத்தம் தரும். குடும்ப சூழ்நிலைகளில் மகிழ்ச்சி நிலவும். நற்பலன்கள் மிகுந்திருக்கும். சுபச் செலவினங்கள் உண்டு. தொழிலில் புத்திசாலித்தனமான செயல்பாடு பாராட்டு பெறும்.

கடகம்
மே 14, 2018

குடும்ப சூழ்நிலைகள் மகிழ்ச்சி தரும். கடன் தொல்லைகள் தீரும். உங்கள் விடாமுயற்சிக்கு ஏற்ற நற்பலன்கள் கிட்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய கட்டாயம் வரும். ஆன்மிக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக அமையும்.

சிம்மம்
மே 14, 2018

இன்று உங்கள் முயற்சிகளில் தடை விலகும். காரிய அனுகூலமாகும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. வியாதிச் செலவினங்கள் வரும். குடும்பத்தில் சுகபோகம் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டு.

கன்னி
மே 14, 2018

வெற்றிகரமான உங்கள் செயல்பாடுகள் பாராட்டு பெறும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலை நிலவும் விருந்து, சுபகாரியம் என பரபரப்பாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை உண்டு. பணவரவு மன நிம்மதி தரும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

துலாம்
மே 14, 2018

குடும்பத்தில் மகிழ்ச்சி மிகுந்திருக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் சச்சரவு வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் சுபிட்ஷமாக இருக்கும். சுபகாரிய முயற்சி நற்பலன் தரும்.

விருச்சிகம்
மே 14, 2018

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். தனதான்ய சேர்க்கை உண்டு. சுபகாரியம் கைகூடும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படவும்.

தனுசு
மே 14, 2018

உங்கள் பொருளாதார சூழ்நிலை முன்னேற்றம் பெறும். உங்கள் செயல்பாடுகளில் சிறப்பு சேரும். நற்பலன்கள் கிடைக்கும். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடு பாராட்டு பெறும். பிடிக்காதவர்கள், மறைமுக எதிர்ப்பாளர்களின் தொல்லை இருக்கும்.

மகரம்
மே 14, 2018

தேக ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றம் பெறும். திட்டமிட்டு செயல்பட்டால், சிரமங்களும் குறையும்.

கும்பம்
மே 14, 2018

பொருளாதார சூழ்நிலைகள் ஓரளவுக்கு திருப்தி தரும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வீர்கள். தவிர்ப்பது நலம். செல்வாக்கு பெருகும். சுபச்செலவு உண்டு. செயல்பாடுகளில் சிறப்பு கூடும்.

மீனம்
மே 14, 2018

செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். நட்பு வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் அனுசரணையான போக்கு, மனநிம்மதி தரும். தெய்வபலம் பக்கபலமாக இருக்கும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …