Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (13-05-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (13-05-2018)

மேஷம்
மே 13, 2018

பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள்.

ரிஷபம்
மே 13, 2018

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் அனுகூலமாகும்.

மிதுனம்
மே 13, 2018

சுபகாரிய முயற்சி அனுகூலமாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர் வகையில் எச்சரிக்கை தேவை. செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். திட்டமிடல் அவசியம்.

கடகம்
மே 13, 2018

இன்று உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். இனம்புரியாத மனக்கவலை சோர்வு தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை.

சிம்மம்
மே 13, 2018

செய்யும் தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் முன்னேற்றம் தரும். தேக ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லை வரும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மிகப் பயணம், சுற்றுலா போன்ற மனதுக்கு இதமான சூழ்நிலை வரும்.

கன்னி
மே 13, 2018

குடும்ப பிரச்னைகள் தீரும். நீங்கள் முயற்சி செய்யும் காரியம் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்னைகள் தீரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும்.

துலாம்
மே 13, 2018

உங்கள் செல்வாக்கு உயரும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். இதுவரை சிரமப்படுத்தி கொண்டிருந்த கடன் சுமை குறையும். முக்கியமான காரியத்தில் சிறுதடை சிரமம் தரும். குடும்ப விஷயங்கள் சுமுகமாக இருக்கும். சுகபோகம் மிகுந்திருக்கும்.

விருச்சிகம்
மே 13, 2018

பணவரவினங்கள் உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். மன நிம்மதி கிட்டும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். இறையருள் உங்களுக்கு நற்பலன்கள் தரும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் தள்ளிப்போகும்.

தனுசு
மே 13, 2018

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எதிர்பாராத பணவரவு உங்களை பதட்டப்பட வைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். உறவுகள், நண்பர்கள் அனுசரணை உண்டு.

மகரம்
மே 13, 2018

இன்று நீங்கள் துணிச்சலாக எடுக்கும் முடிவு, செயல்படும் விஷயம் அனுகூலமாகும். தேக ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். அயன சயன போகம் உண்டு. பயணத்தில் முன்னெச்சரிக்கை தேவை. குடும்பப் பிரச்னைகளில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

கும்பம்
மே 13, 2018

துணிச்சலாக செயல்படுவீர்கள். பணவரவுகள் மனதிருப்தி தரும். குடும்பத்தில் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். நம்பிக்கைக்கு உரியவர்களால் ஏமாற்றமடைவீர்கள். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும்.

மீனம்
மே 13, 2018

நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் தள்ளிப்போகும். அரசு காரியம் அனுகூலமாகும். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தர்மகாரியம் செய்யும் வகையில் சூழ்நிலை இருக்கும்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …