Home / latest-update / இன்றைய ராசி பலன் (08-07-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (08-07-2018)

மேஷம்
ஜூலை 08, 2018

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலையில் வருமானம் கூடும். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும். லாபகரமான விஷயம் அனுகூலமாகும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. வீண் பயம் மனசஞ்சலம் தரும்

ரிஷபம்
ஜூலை 08, 2018

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். எதிர்பாராத வரவினங்கள் உங்கள் கடன் சுமைகளை குறைக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றம் தரும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மிதுனம்
ஜூலை 08, 2018

தொழில் ரீதியான எதிர்ப்புகள் விலகி அனுசரணையான சூழ்நிலை வரும். குடும்பத்தில் சந்தோசமான சூழ்நிலை வரும். சுபகாரிய முயற்சி முன்னேற்றம் பெறும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். உறவுகள் மேம்படும். மனநிம்மதி கிட்டும்.

கடகம்
ஜூலை 08, 2018

தேவயைற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். வீண் பயம் மனவருத்தம் தரும். நீங்கள் எதிர்பார்த்த விஷயம் லாபகரமாக கை கூடும். பணச்சிக்கல்கள் தீரும். விருந்தினர் வருகை இல்லம் சிறக்கும். நல்விருந்து மனமகிழ்ச்சி தரும்.

சிம்மம்
ஜூலை 08, 2018

இன்று வீடு, மனை போன்ற விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். இது­வரை உங்­க­ளு­டன் பிணக்­காக இருந்­த­வர்­கள் பகை மறந்து நேசம் பாராட்­டு­வர். குடும்ப சூழல் மகிழ்ச்­சி­க­ர­மாக இருக்­கும். சிறு­சிறு பிரச்னை வந்­தா­லும் சமா­ளிப்­பீர்­கள். தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும்.

கன்னி
ஜூலை 08, 2018

பொரு­ளா­தார சூழ்­நிலை­கள் சுபிட்­ச­மாக இருக்­கும். குடும்ப செல­வி­னங்­கள் கட்­டுக்­குள் இருக்­கும். வீடு, மனை போன்ற விஷ­யங்­கள் நீங்­கள் எதிர்­பார்க்­கும் வகை­யில் லாப­க­ர­மாக இருக்­கும். முக்­கி­ய­மான ஒரு காரிய முயற்சி தடை­யா­கும். கவ­ன­மாக இருக்­க­வும்.

துலாம்
ஜூலை 08, 2018

பண­வ­ர­வு­கள் உங்­கள் பிரச்­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­யும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. குடும்ப சூழ்­நிலை­கள் சுபிட்­ச­மாக இருக்­கும். சுக­போ­கங்­கள் நிறைந்­தி­ருக்­கும். உல்­லா­சப்­ப­ய­ணம் பொழுது போக்கு அம்­சங்­கள் மன­ம­கிழ்ச்சி தரும். பயண சம­யத்­தில் கவ­னம் தேவை.

விருச்சிகம்
ஜூலை 08, 2018

மன மகிழ்ச்சி தரும் சூழ்­நிலை­கள் இன்று நிறைந்­தி­ருக்­கும். சுபச்­செ­ல­வி­னங்­கள் உண்டு. பொரு­ளா­தார சூழ்­நிலை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான எதி­ரி­கள் தொல்லை, சிர­மம் தரும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள்.

தனுசு
ஜூலை 08, 2018

லாப­க­ர­மான விஷ­யங்­கள் உங்­கள் சிர­மங்­களை குறைக்­கும். தெய்­வ­ப­லம் – உங்­க­ளுக்கு துணை நிற்­கும். ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும். மன­நி­றை­வான உணவு உறக்­கம் இருக்­கும். உற­வி­னர்­கள் அனு­ச­ர­ணை­யாக இருப்­பார்­கள்.

மகரம்
ஜூலை 08, 2018

வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். உங்­க­ளது விடா­மு­யற்சி, தன்­னம்­பிக்கை காரிய சாதனை, பொரு­ளா­தார முன்­னேற்­றம் தரும். கவ­லை­கள் நீங்­கும். நட்பு ரீதி­யான உதவி ஒத்­தாசை கிடைக்­கும்.

கும்பம்
ஜூலை 08, 2018

நீங்­கள் எதிர்­பார்க்­கும் விஷ­யம் சம்­பந்­தப்­பட்ட நல்ல செய்தி வரும். நினைத்­தது நடக்­கும். கடன் பிரச்­னை­கள் குறை­யும். தொழில் ரீதி­யான சிறப்பு செயல்­பாடு பலன் தரும். செல்­வாக்கு உய­ரும். குடும்­பத்­தில் உங்­கள் பணி பாராட்டு பெறும்.

மீனம்
ஜூலை 08, 2018

இன்று சுப பலன்­கள் மிகுந்­தி­ருக்­கும். ஆன்­மி­கத்­தில் நாட்­டம் வரும். தொழில் ரீதி­யான சூழ்­நிலை­கள் சுமு­க­மாக இருக்­கும். எதிர்­பா­ராத செல­வு­கள், வீண் விர­யம், உங்­கள் மனதை வருத்­தும். திட்­ட­மி­டல் அவ­சி­யம் தேவை. தொழில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். திட்டமிடல் அவசியம்.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …