Breaking News
Home / latest-update / இன்றைய இராசி பலன்கள் – 24.05.2018
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய இராசி பலன்கள் – 24.05.2018

மேஷம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.

ரிஷபம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

 

மிதுனம்: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் செலவுக்காக கடன் வாங்குவர். உடல்நலனில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.

 

சிம்மம்: முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

கன்னி: பிறர் கூறும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

 

துலாம்: உதவி பெற்றவர் கூட நன்றி மறந்து செயல்படுவர். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

விருச்சிகம்: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறர் வியக்கும் வகையில் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

 

தனுசு: திட்டமிட்ட பணி விரைவாக நிறைவேறும். தொழிலில் உருவாகிற இடையூறை முறியடிப்பீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகரம்: நண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் புகுத்த வீட்டினரால் பெரிதும் மதிக்கப்படுவர். அரசு வகையில் நன்மை உண்டு.

 

கும்பம்: ஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சமையைச் சந்தித்தாலும் வருமானம் வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

மீனம்: இனிய பேச்சால் பிறரைக் கவர்ந்திழுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …