Breaking News
Home / latest-update / இன்றைய இராசி பலன்கள் – 22.05.2018
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய இராசி பலன்கள் – 22.05.2018

மேஷம்: நண்பருக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். ஆரோக்கியம் பலம் பெறும்.

ரிஷபம்: சொந்தப் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

மிதுனம்: மனதில் நல்லெண்ணம் மேலோங்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். குடும்ப பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

 

கடகம்: திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.

சிம்மம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் ஆடம்பரச் செலவில் ஈடுபடுவர். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

கன்னி: செயல்களில் குளறுபடி ஏற்படலாம் கவனம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

 

துலாம்: இஷ்ட தெய்வத்தின் அருளால் இடையூறு விலகும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்: கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உறவினரால் உதவி உண்டு.

தனுசு: நண்பரின் உதவியால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. தொழிலில் உருவாகிற இடையூறை தாமதமின்று சரிசெய்வது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானம் கிடைக்கப் பெறுவர்.

 

கும்பம்: நேர்மை மிக்கவராக விளங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மீனம்: நண்பர்களிடம் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …