Thursday , April 26 2018
Breaking News
Home / latest-update / இன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

இன்று இரவு கொழும்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து!

இலங்கையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சித்திரைப் புதுவருடத்தன்று யாரும் எதிர்பாராத அனர்த்தம் ஒன்று ஏற்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.

அதுதான் கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு. இந்த குப்பை மேடு சரிந்ததில் 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், மக்களின் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

எனினும் அந்த வலிகள், துன்பங்கள் மறைவதற்கு முன்னர், மீண்டும் அப்பகுதி மக்களுடைய தலையில் இடி விழுவதைப் போன்று சில செய்திகள் வெளிவந்துள்ளன.

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளிலும் மழைபெய்து வருகின்றது. அதிலும் மலையகத்தில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது.

இதன் பாதிப்பு மற்றும் இதன் விளைவை கொழும்பு வாழ் மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது.

மலையகத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதால் பல நீர்நிலைகளில் நீரின் மட்டம் அதிகரித்ததுடன், பல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திறக்கப்படும் வான் கதவுகளின் நீர், களனி கங்கையினூடா சென்று அதன் பின்புதான் கடலுடன் கலக்கப்படுகின்றது.

இதனால் அதிக நீர் களனி கங்கைக்கு வருவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதை அண்டியுள்ள பிரதேசங்களுக்கும் நீர் புகும் ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி எச்சரித்துள்ளார்.

இதனால் இன்று இரவு வேளைக்குள் களனி கங்கையை அண்டியுள்ள மக்களை அவசரமாக வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களனி, கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டி, பியகம, சேதவத்த தொம்பே, பன்வெல, பாதுக்கை, அவிசாவளை பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 117 என்ற அவசர அழைப்பு மற்றும் 0112 136 136, 0112 670 002 மற்றும் 0112 136 222 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஏற்படும் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கு தகவல் வழங்கும் நடவடிக்கையில் எமது செய்திச் சேவை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபடியான மழைவீழ்ச்சியாக களுத்துறை மில்லகந்த பிரதேசத்தில் 615 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை வீரகெடிய பிரதேசத்தில் 495 .5 மில்லிமிற்றர் மழைவீழ்ச்சியும் , படுவன்கல, பாதுக்கை மற்றும் அவிசாவளை பிரதேசங்களில் 300 மில்லி மீற்றர் மழை வீழச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …