Breaking News
Home / latest-update / இன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்னும் மூன்று தினங்களில் முல்லை மண்ணில் ஓர் பிரமாண்டமான போட்டிக்களம்….தயாராகிவிட்டீர்களா மாணவர்களே…..!!

முல்லைத்தீவு  மாவட்ட மாணவர்களே “Anchor Students with Talent” பிரம்மாண்ட போட்டிக்களம் யாழ் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து உங்கள் இசை, நடன, தொழிநுட்பத் திறன்களுக்காகவும் களம் கொடுக்க நாங்கள் தயார்..எதிர்வரும் 23ம் திகதி முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை (Convent)  காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் உங்கள்  இசை, நடன, தொழிநுட்பத்துறை சார் திறன்களை வெளிப்படுத்த போட்டி விதிமுறைகளுக்கமைவாக தயாராகுங்கள்.

“Anchor Students with Talent” போட்டி விதிமுறைகள் இவை தான்……

கீழ்ப்பிரிவு தரம் 6,7,8,9

மேற்பிரிவு தரம் 10,11,12,13

1)19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்குபெற முடியும்.

2)போட்டியாளர்கள் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு உங்கள் பாடசாலைக்கு அண்மித்த போட்டிக்களத்திற்கு தங்கள் பாடசாலை சீருடையில் சமூகமளிக்க வேண்டும்.

3) முதலாம் சுற்றிற்கும் இரண்டாம் சுற்றிற்கும் நடனத்தில் பங்குபெறும் மாணவிகள் சுடிதார் அணிந்து வர வேண்டும். ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு ஏற்ற உடையை அணியலாம்.

4) பிரம்மாண்ட இறுதி சுற்றிற்கும் நடனத்தில் பங்குகொள்ளும் மாணவர்கள் கட்டாயம் அந்த நடனத்திற்குரிய ஆடை( Dance Costume ) மற்றும் ஒப்பனையுடன் வரவேண்டும்.

5)இசை மற்றும் தொழில்நுட்பத்தில் பங்குபெறும் மாணவர்கள் முதலாம் இரண்டாம் சுற்றிற்கு பாடசாலை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் பிரம்மாண்ட
இறுதிச்சசுற்றிற்கு பங்குபெறும் இருபாலரும் பாடசாலை சீருடையுடன் பிளேசர்

(BLAZER) அணிய வேண்டும்.

6)போட்டிகளில் பங்குபெறுவோர் பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவத்துடனும் பொறுப்பாசிரியர் உடனும் சமூகமளிக்க வேண்டும்.

7)அத்தினத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை எங்கள் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்

8)விண்ணப்பப்படிவத்தில் போட்டியாளர்களின் முழுப்பெயர் தமிழில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்

9)ஒரு போட்டியாளர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்குகொள்ளலாம்.

10)போட்டியில் பங்குபெறும் பாடசாலைகள் 13/09/2018 ம் திகதிக்குள் தொலைப்பேசி மூலம் தங்கள் வருகையையும் தாங்கள் எந்த பிரதேச போட்டிக்களத்துக்கு சமூகமளிக்க உள்ளீர்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

11)விண்ணப்பப்படிவத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாத்திரமே பங்குபற்றியமைக்கான சான்றிதழ் போட்டி தினத்தன்று வழங்கப்படும்.

12)ஒரு பாடசாலையில் இருந்து நடனத்திற்கு கீழ்ப்பிரிவில் இருந்து ஒரு போட்டியாளரும் மேற்பிரிவில் இருந்து ஒரு போட்டியாளருமாக 2 போட்டியாளர்கள் பங்குபற்றலாம் .இசையில் இருந்து கீழ்ப்பிரிவில் 3 போட்டியாளர்களும் மேற்பிரிவில் 3 போட்டியாளர்களுமாக 6 போட்டியாளர்கள் கலந்துகொள்ளலாம். தொழில்நுட்பத்திற்கு ஆகக்கூடியது 5 போட்டியாளர்கள் ஒரு பாடசாலையில் இருந்து பங்குகொள்ளலாம்.

13)போட்டிநிகழ்ச்சிக்கு வருகின்ற அனைவருக்கும் Anchor பால் வழங்கப்படும்.

14)உணவு வசதிகளை பாடசாலை மாணவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.

15)நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை அதிபர்களே ஆசிரியர்களே உங்கள் மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வர, உங்கள் பாடசாலைகளுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள மாணவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் இசை நடன தொழிநுட்பத்துறை சார் ஆக்கப்பூர்வமான ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை 072 8400282 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவைப்பதனூடாக முன்கூட்டியே விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பிக்க இன்றே விரையுங்கள், மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள மற்றும் வருகையை உறுதிப்படுத்த தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம் ரஜீவ்: 0773120630…..

Check Also

‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது …