Breaking News
Home / latest-update / இந்த மூன்று ராசிகாரர்கள் தான் அரிதானவர்களாம்…! இதில் உங்க ராசி எது…?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்த மூன்று ராசிகாரர்கள் தான் அரிதானவர்களாம்…! இதில் உங்க ராசி எது…?

சில ராசிக்காரர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள், மிகவும் அரிதானவர்கள் இது எந்த ராசிக்காரர்கள், இவர்கள் ஏன் அதிஷ்டசாலிகள் என்று அழைப்படுகிறார்கள் என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அரிதான நபர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களை தாங்களே நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களது உறவுகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள்.

இவர்கள் சவால்களை சமாளிக்கும் விஷயத்தில் சற்று பலவீனமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்தை காண்கிறார்களோ அதை அடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.




இவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் போதோ, யாராவது இப்படி நடந்துவிடலாம், அது சரியாக வராது என்பது போன்ற தங்களது கற்பனைகளை சொல்வதை விரும்பமாட்டார்கள்.
ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். அதிகாரம் செலுத்த ஆசைப்படுவார்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டும் திறன் அதிகமாக இருக்கும்.

துணிச்சலும், அச்சமின்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதில் உள்ள உறுதியான கருத்துக்களை எடுத்துக் கூறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு

மிகவும் அரிய மூன்று ராசிகளில் இந்த தனுசு ராசியும் ஒன்றாக உள்ளது. இந்த ராசிக்காரகள் ஏன் மிக அரிதானவர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் சமீப காலமாக தனுசு ராசியில் பிறப்பவர்களே குறைவாகிவிட்டார்கள். இவர்கள் மிக அரிதான இரத்தினம் போன்றவர்கள் மேலும் இவர்களது அறிவு திறன் மிக கூர்மையானது.
இவர்கள் தங்களது அதீத சக்தியால் பணம் மற்றும் ஆண்களை கவர்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்த உலகத்தை நன்றாக புரிந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள்.




இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அரிதான ராசிக்கார்களாக இருக்கிறார்கள்.
இவர்களுடைய பிறப்பில் இருந்தே விசுவாசம் என்பது இவர்களோடே இருக்கும் ஒன்றாகும். உறவுகளை அதிகமாக மதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடமும் அதே விசுவாசவத்தை எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பது இல்லை.. இந்த விஷயங்களால் தான் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.




எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …