Breaking News
Home / latest-update / இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.

இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா – தவான் ஜோடி ஓட்டங்கள் குவிக்க திணறியது. இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தலைவர் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ஓட்டங்களை குவித்தனர்.

17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ஓட்டங்களும், டோனி 66 பந்தில் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

புவனேஸ்வர் குமார் 21 ஓட்டங்களும், சர்துல் தாகூர் 13 பந்தில் 22 ஓட்டங்கள் என 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்களாக வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.4 ஓவரின் 43 ஓட்டங்கள் அடித்திருந்த நிலையில் தாக்கூர் பந்து வீச்சில் ரெய்னாவிடம் பிடி கொடுத்து பெய்ர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

அவர் 13 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் உட்பட 30 ஓட்டங்கள் விளாசினார். மற்றொறு தொடக்க துடுப்பாட்ட வீரரான வின்ஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து தலைவர் மோர்கன் ஜோடி சேர்ந்தனர்.

இந்திய பந்துவீச்சை சிதரடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறினர். ரூட் 60 பந்துகளிலும், மோர்கன் 58 பந்துகளிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். 3 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ஓட்டங்களை சேர்த்து அசத்தினர்.

இறுதியில், பாண்டியா வீசிய 44 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை நான்கு ஓட்டங்களுக்கு விரட்டிய ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13 ஆவது சதத்தை பதிவுசெய்தார்.

மோர்கன் 108 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே 10 ஓவருக்கு 55 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட புவனேஷ்குமார், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றமளித்தனர்.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …