Breaking News
Home / latest-update / இங்கிலீஷ் பிரீமியர் லீக்- அர்செனலை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இங்கிலீஷ் பிரீமியர் லீக்- அர்செனலை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியர் லீக்- அர்செனலை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

கடந்த வாரம் நடைபெற்ற கால்பந்து லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் அர்செனல் அணியை 3-0 என மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் ஆட்டம் ஒன்றில் இரு அணிகளும் மோதின. அர்செனலுக்கு சொந்தமான லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதை 58420 ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.



அர்செனல் தனது சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மான்செஸ்டர் சிட்டி அணியின் பெர்னாடோ சில்வா 15-வது நிமிடத்திலும், டேவிட் சில்வா 38-வது நிமிடத்திலும், லெரோய் சானே 33-வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.

முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்காததால் மான்செஸ்டர் சிட்டி 3-0 என வெற்றி பெற்றது.



இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 28 போட்டிகளில் 24-ல் வெற்றி பெற்று 75 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 59 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையில் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது.

இன்னும் 10 போட்டிகளில் மீதமுள்ளது. இதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மான்செஸ்டர் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிடும்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …