Saturday , February 24 2018
Breaking News
Home / latest-update / ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
https://www.facebook.com/esoftjaffna/

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 72 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 74 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். அதற்கான தேர்தல் பிரசாரமும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரசாரம் செய்வதாக வெளியான தகவலுக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து கவுண்டமணி கூறியிருப்பதாவது,
நான் எந்தக் கட்சியையும் சாராதவன், ஆர்.கே.நகரில் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து நான் பிரசாரம் செய்யப்போவதாக பரப்பப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற அவதூறு செய்தி வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Check Also

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி

சோமாலியா நாட்டின் மொகடிசு நகரில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான …

Leave a Reply

Your email address will not be published.