Breaking News
Home / latest-update / அராலியில் கொடூரம்!! மகளைக் கொலை செய்து தாயும் தற்கொலை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

அராலியில் கொடூரம்!! மகளைக் கொலை செய்து தாயும் தற்கொலை

குடும்­பத் தக­ராறு கார­ண­மாக மனம் குழம்­பிய பெண் தவ­றான முடி­வெ­டுத்­துத் தனது குழந்­தை­யை­யும் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக் கொண்­டார். யாழ்ப்­பா­ணம், அரா­லி­யில் நேற்று இந்­தச் சம்­ப­வம் இட­ம்பெற்­றது.

தாயின் முன்­யோ­ச­னை­யற்ற தவ­றான முடி­வால் 6 வய­தான பாலகி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். மற்­றைய குழந்­தை­யை­யும் கொல்­வ­தற்­குத் தாய் முயன்­ற­போ­தும் அவர் தப்­பி­யோடி அய­ல­வர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­ததை அடுத்து சம்­ப­வம் வெளியே தெரி­ய­வந்­தது.

26 வய­தான மூன்று பிள்­ளை­க­ளின் தாயாரே இந்­தப் பாத­கச் செய­லைச் செய்­த­து­டன் தன்­னை­யும் மாய்த்­துக் கொண்­டார்.

கண­வன் மனை­விக்கு இடை­யில் ஏற்­பட்ட சண்­டையே அந்­தப் பெண் இப்­ப­டித் தவ­றான முடி­வெ­டுப்­ப­தற்­குக் கார­ணம் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இரு­வ­ருக்­கும் இடை­யில் நேற்­றைய தினம் சண்டை முற்­றிய நிலை­யில் மாலை­யில் தாயார் தானும் பிள்­ளை­க­ளும் தூக்­கில் தொங்­கி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளார்.

ஒரு மகள் வீட்­டை­விட்டு வெளியே சென்­றி­ருந்த நிலை­யில், கடைசி மக­ளைத் தூக்­கி­லிட்­டு­விட்டு மற்­றைய மக­ளை­யும் தூக்­கி­லிட முயன்­றி­ருக்­கி­றார். பயந்­து­போய் தாயி­ட­மி­ருந்து தப்­பித்து ஓடிய அந்­தப் பிள்ளை அய­ல­வர்­க­ளி­டம் தக­வல் சொல்­லி­யுள்­ளார்.

அய­ல­வர்­கள் வந்து பார்த்­த­போது தாயும் பிள்­ளை­யும் தூக்­கில் தொங்­கி­ய­படி இருந்­த­னர். அவர்­களை உட­ன­டி­யாக மீட்டு வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்து விரைந்­த­னர். எனி­னும் தாயார் ஏற்­க­னவே இறந்­தி­ருந்­தார்.

வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­ப­டும்­போது உயி­ரு­டன் இருந்த சிறுமி 4 மணி நேரப் போராட்­டத்­தின் பின்­னர் உயிரை விட்­டார்.

இறப்பு விசா­ர­ணை­களை திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் மேற்­கொண்­டார். இரு­வ­ரது சட­லங்­க­ளும் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …