Breaking News
Home / latest-update / அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #MelaniaTrump

Check Also

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. …