Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / அமெரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

அமெரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி…!

அமெரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன நிலையில். அங்கு கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.

பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.




பொலிஸார் சென்று பார்த்தபோது அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து 2 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்தது. அடுத்த சில நிமிடங்களில், பெயிண்ட்ஸ் வில்லேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிஸில்முறைப்பாடு செய்யப்பட்டது.

அங்கு துப்பாக்கிச்சூட்டினை நடத்திய நபர் உள்பட 3 பேர் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். இந்த இரு சம்பவத்தையும் ஒரே நபர்தான் நடத்தி இருப்பார் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியின் ஷெரீப் பிரைஸ் கூறும்போது, “இது பயங்கரமான படுகொலைகள் ஆகும். ஒரே நபரின் வன்செயலால் 4 உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை தரும் நிகழ்வு ஆகும். நான் 34 ஆண்டுகளில் பார்த்த மிக மோசமான வன்செயல் இதுதான்” என்று குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடுகளை ஜோசப் நிக்கெல் என்பவர்தான் நடத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளதுடன். அவரைப்பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்பதால் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …