Home / latest-update / அமர்ந்திருப்பது இன்னுமொரு வகையிலான புகைப்பிடித்தலாகும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அமர்ந்திருப்பது இன்னுமொரு வகையிலான புகைப்பிடித்தலாகும்

மிகவும் துரிதமான இந்த உலகிலே, ஒரு அலுவலகத்திலேயோ அல்லது அருகிலிருக்கும் ஒரு தேநீர் கடையிலோ அல்லது வீட்டிலிருந்தவாறே ஏதாவது ஒரு வடிவத்திலான திரையை பார்ப்பதையே தான் நாம் எல்லோரும் எமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களை எடுத்துக்கொண்ட தொழில்நுட்பத்தின் வருகையினாலே நாம் நமது நாளின் பெரும்பாலான பகுதியை சிறியளவிலான உடற்பயிற்சியுடனோ அல்லது உடற்பயிற்சியற்ற ரீதியிலோ அமர்ந்த நிலையிலேயே கழிக்கின்றோம். அத்துடன் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், வெளிப்புறங்களில் விளையாடுவதற்கு பதிலாக தமது முழுமையான சிறுவர் பிராயத்தையும் கணணி மயப்படுத்தப்பட்ட உலகிலேயே கழிக்கின்றனர். 

இந்த பழக்கவழக்கங்களானது முக்கியமாக கழுத்து மற்றும் முதுகுப்புறப்பகுதியிலும் உடற்தோற்றத்தின் நிலையிலும் குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினைகளை சகல வயதினர் மத்தியிலும் ஏற்படுத்துகின்றது. மருத்துவ வல்லுனர்களினால் “iPad Neck” எனப்படும் ஒரு வித நோய் நிலைக்கு செல்லுமளவிற்கு இவை தற்போது மாறியுள்ளன. நீண்ட நேரத்திற்கு அசௌகரியமான நிலையில் அமர்ந்திருத்தல் மற்றும் அசௌகரியமான நாற்காலிகளில் அமர்ந்திருத்தல் என்பன எம்மை மரணத்திற்கு அழைத்துச்செல்லலாம் என நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளமையினால் ´அமர்ந்திருப்பது இன்னுமொரு வகையிலான புகைப்பிடித்தலாகும்´ என்பது தற்போது பொதுவாக பயன்படுத்தப்படும் இன்னுமொரு பதமாக காணப்படுகின்றது. அடிமுதுகு வலிக்கான பொதுவான காரணமாக உடல்தோற்ற நிலையில் ஏற்படுகின்ற அழுத்தமே காணப்படுகின்றது. அசௌகரியமற்ற நிலைகளில் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருப்பதனாலேயே அடிமுதுகு வலியானது ஏற்படுகின்றது. நீங்கள் முன்னதாக சாய்ந்து எவ்வளவு நேரத்திற்கு அவ்வாறானதொரு நிலையிலே காணப்படுகின்றீர்களோ, அதுவே உங்களுடைய மேல் முதுகு மற்றும் கழுத்தானது எவ்வளவு மேலதிக வேலையை செய்ய வேண்டுமென்பதை தீர்மானிக்கின்றது. ஒரு நாற்காலியிலிருந்து உங்களுடைய முதுகிற்கு முறையான ஆதரவின்மை அல்லது கிடைக்கும் ஆதரவானது மிகவும் மென்மையானதாக காணப்படுதலே இவ்வாறான பொது பிரச்சினைகளிற்கான காரணிகளாக காணப்படுகின்றது.

அதிகரித்து வரும் இப்பிரச்சினைகளை தடுக்கும் வகையில், இலங்கையின் முன்னோடி வாழ்க்கை முறைமை பிராண்டான JAT Holdings ஆனது, முக்கியமாக உங்களுடைய நாளில் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும் அலுவலகங்களிற்கு ஏற்ற வகையில் பணிச்சூழலியலில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி வகைகளை அறிமுகப்படுத்துகின்றது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Herman Miller பிராண்டானது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மனித உடல் தோற்றத்தை கருத்திற்கொண்டு நாற்காலிகளை வடிவமைப்பதில் அனுபவத்தை கொண்டுள்ளது. இவ் நாற்காலிகளானவை முகுகு வலியை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளை தடுப்பதுடன் ஒரு நபர் நீண்ட நேரம் நிமிர்ந்த நிலையில் அமர்ந்திருப்பினும் சௌகரியமாக அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட JAT தளபாட காட்சியறையில் Herman Miller சகல வகைகளை பெற்றுக்கொள்ள இயலும். இவ்வாறான ஒரு வகை நாற்காலி ‘Aeron’ என அழைக்கப்படுவதுடன் சரியான தோரணை எனும் அர்த்தத்தை கொண்டுள்ளது. மற்றைய நாற்காலிகளைப் போலல்லாது மனிதரை மையப்படுத்திய புதுமையான மற்றும் முன்னர் எப்பொழுதும் காணப்படாத வகையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வகையான நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பணிச்சூழலிற்கு ஏற்ற வகையிலும், செயற்றிறன் மிக்க வகையிலும், சூழலிற்கு பொருத்தமான வகையிலும் இந்நாற்காலிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய நிலை வடிவமைப்பானது உங்களுடைய முதுகு தண்டிற்கு பொருத்தமான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் உங்களுடைய இடுப்புப் பகுதிக்கு தேவையான ஆதரவை வழங்குகின்றது என்பதை உறுதி செய்கின்றது.

வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சாய்வான பொறிமுறையானது, நாற்காலியானது நீங்கள் நகரும்பொழுது நகர்வதுடன் நீங்கள் பல பணிகளை செய்யும்போது தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் ஆதரவை வழங்குகின்றது என்பதை உறுதி செய்கின்றது. எந்தவொரு உடல் அளவிற்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இதன் வடிவமைப்பானது தனித்துவமானதாக காணப்படுகின்றது. ஒரு கையுறையை போன்று பயன்படுத்துபவர்களிற்கு 3 வித அளவுகளில் மாற்றமடைந்து பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொள்வனவு செய்து தொடர்ச்சியாக பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் எஃகு என்பனவற்றின் ஒரு கலவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களில் முன்னர் எப்பொழுதும் கேள்விப்படாத, 3 சுழற்சி மற்றும் நிபந்தனையற்ற உத்தரவாதம் என்பனவற்றுடன் வரும் இந்நாற்காலிகளை வௌ;வேறுபட்ட நிறங்கள் மற்றும் மாதிரிகளில் கோல்ட்ஸ் பில்டிங், 241, கோட்டைத்தெரு, கொழும்பு 8 எனும் முகவரியில் அமைந்துள்ள காட்சியறையில் பெற்றுக்கொள்ள இயலும். JAT Furnishings இனது நாற்காலி வகைகளை நீங்கள் www.jatholdings.com எனும் இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

JAT Furnishings இனை எனும் 0115 288662 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்க.

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …