Breaking News
Home / latest-update / அதிசயம் – காற்றில் பறந்து வந்த 500 ரூபாய் தாள்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அதிசயம் – காற்றில் பறந்து வந்த 500 ரூபாய் தாள்கள்

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப் பள்ளி என்ற இடம் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த வழியாக ஏராளமான பொது மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்து மூலம் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று அந்த பகுதியில் காற்றில் காகித துண்டுகள் பறந்து வந்தன. இவை சாலைகளில் விழுந்தன. அந்த வழியாக நடந்து சென்ற சிலர் அதை எடுத்து பார்த்த போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த காகித துண்டுகள் அனைத்தும் 500 ரூபாய் தாள்களாகும். அதுவும் தற்போது புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் தாள்கள் என்பது தெரிய வந்தது.

இதைப்பார்த்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வீதியில் பறந்த 500 ரூபாய் தாள்களை எடுக்கத் தொடங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி விட்டு 500 ரூபாய் தாள்களை சேகரித்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. காற்றில் ரூபாய் தாள்கள் பறந்து வந்தது பற்றிய தகவல் கிடைத்ததும், பொலிஸார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட் டனர்.

மேலும் 500 ரூபாய் தாள்களை சேகரித்தவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி பொலிஸார் அவை கள்ள நோட்டுக்களாக இருக்குமா? என்று சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவை பாவனைக்குரியது என்பது தெரிய வந்தது. பொலிஸாரை பார்த்ததும் ரூபாய் தாள்களை எடுத்தவர்கள் அங்கிருந்து நழுவிச்சென்று விட்டனர்.

வாகனத்தில் யாராவது ரூபாய் தாள்களை எடுத்துச் சென்றபோது கவனக்குறைவு காரணமாக அவை காற்றில் பறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வீதியில் ரூபாய் தாள்கள் பறந்தது எப்படி? யார் ரூபாய் தாள்களை பறக்க விட்டது என்பது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …