Breaking News
Home / latest-update / அட்லீக்கு ரெட்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அட்லீக்கு ரெட்?

விஜய்யின் ‘மெர்சல்’ படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ‘ஆஹா’ போட வைத்துவிட்டது.

முக்கியமாக அஜீத்தின் அதி தீவிர ரசிகர்கள் கூட அமைதியாக இருந்துவிட்டார்கள். இதே ‘விவேகம்’ வெளியான நேரத்தில் அப்படத்தை உண்டு இல்லை என்று பிரித்து மேய்ந்த விஜய் ரசிகர்களை, ‘மெர்சல்’ வரட்டும் வச்சுக்கலாம் என்று காத்திருந்தார்கள் அஜீத் கண்மணிகள்.

ஆனால் அவர்கள் கண்களில் ஈயாட விட்டுவிட்டார் அட்லீ. படம் அவ்வளவு பிரமாதம் என்று நாலாபுறத்திலிருந்தும் ரிப்போர்ட்.

ஆனால், ஒருபுறம் நல்ல பெயரை சம்பாதித்த அட்லீ இப்படத்தின் செலவு விஷயத்தில் கைக்கு அடக்கமாக இல்லாததால், படம் 50 நாட்கள் ஃபுல்லாக ஓடினாலும் தயாரிப்பாளர் கண்ணை கசக்குவது நிச்சயம் என்கிறது இன்டஸ்ட்ரி.

‘ஏன் அட்லீக்கு ரெட் போடக் கூடாது?’ என்று சில முக்கிய தயாரிப்பாளர்கள் கூடி கூடி விவாதிக்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. ‘தலையை மொட்டை அடிச்சுட்டு கிரீடம் என்ன வேண்டிக் கிடக்கு?’ என்கிற இவர்களின் கேள்விக்கு, அட்லீயின் ரியாக்ஷன்தான் என்ன?

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …