Breaking News
Home / latest-update / அசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது

அசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது

லெனோவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இசட்5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என டீசர்கள் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 90% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.
கிளாஸ் பேக் மற்றும் 2.5D வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6 சீரிஸ் அலுமினியம் மெட்டல் ஃபிரேம், கைரேகை சென்சார் மற்றும் 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
லெனோவோ இசட்5 சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ZUI 3.9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
– 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3300 எம்ஏஹெச் பேட்டபி ஃபாஸ்ட் சார்ஜிங்

Check Also

தென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …