Home / யாழ்ப்பாணம் / UPDATE : யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

UPDATE : யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியம்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த டொன் பொஸ்கோ என்ற இளைஞன் மரணமடைந்துள்ளார்.

 

நேற்று 2:20 மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 9:20 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும் குறித்த இளைஞனின் மார்புப் பகுதியினை துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை குறித்த இளைஞன் மீது பொலிசாரே துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தால் யாழ் போதனா வைத்தியசாலையில் பதற்றம் நிலவுகின்றது.

Check Also

யாழில் மனைவி, பிள்ளைகளிற்கு கணவன் செய்த கொடுமை

மனைவி, பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் காயப்படுத்திய குடும்பத் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. சாவகச்சேரியைச் …