Breaking News
Home / உலகம்

உலகம்

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி

சிரியா நாட்டின் அர்பின் பகுதியில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் …

Read More »

பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களை சிறைப்பிடித்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

தெற்கு பிரான்சில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி மூன்று நபர்களை கொன்ற பயங்கரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தினர். பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களை சிறைப்பிடித்த பயங்கரவாதி சுட்டுக்கொலை பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று புகுந்த பயங்கரவாதி, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து, பிணைக் கைதிகளை காப்பாற்ற முயன்றனர். அப்போது, …

Read More »

இன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்

 ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். தண்ணீருக்காக, கண்ணீர் விடும் அவலம் வந்துவிடக்கூடாது என்ற நிலையை உணர்ந்து, தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். வரும் சந்ததியினருக்கும் தண்ணீர் தேவை என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். ‘இயற்கைக்கு தண்ணீர்’ என்பது இந்தாண்டு உலக தண்ணீர் தினத்தின் (மார்ச் 22) மையக்கருத்து. உலகில் 210 கோடி …

Read More »

ஆட்சிக்கு எதிராக கலகம் – மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு விசாரணை முடியும் வரை சிறை

மாலத்தீவு நாட்டில் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் ஆட்சிக்கு எதிராக கலகம் புரிந்த வழக்கில் முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கய்யூம்-க்கு விசாரணை காலம்வரை சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது. மாலே: மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கய்யூம், தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்ததாகவும், வன்முறையை தூண்டிவிட்டதாகவும் அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் எழுந்த கிளர்ச்சியை அடக்கும் …

Read More »

பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தியவரின் உயிரை காவு வாங்கிய ராஜநாகம்

பாம்புகளை பிடித்து கொஞ்சி விளையாடுவது, முத்தமிடுவது என மக்களிடையே மிகவும் பிரபலமான கோலாலம்பூரை சேர்ந்த அபு ஜாரின் ஹுசைன் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்தவர் அப் ஜாரின் ஹுசைன் (33). தீயணைப்புத்துறை வீரரான இவர் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பிடிப்பதோடு மட்டுமில்லாமல், பாம்பிற்கு முத்தமிடுவது, அவற்றுடன் சகஜமாக பழகுவது, அவற்றுடனே தூங்குவது என அசாத்திய செயல்களை செய்வதில் வல்லவர். எவ்வளவு கொடிய …

Read More »

2014ல் மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய தகவல் வெளியீடு

2014-ம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் …

Read More »

குழந்தையை மடியில் வைத்ததற்காக தந்தை – மகளை இறக்கிவிட்ட விமான நிறுவனம் – வீடியோ

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்ய பயந்து அழுத குழந்தையை மடியில் வைக்கக்கூடாது என தந்தை – மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள மிட்வே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டா நகரை நோக்கி செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஒரு நபர் தனது மகளுடன் பயணித்தார். அவருக்கு …

Read More »

தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல்

ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More »

அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி

அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது. இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்துசெல்வதற்காக …

Read More »

அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டு சிறை

அமெரிக்காவை சேர்ந்தவர், முகனாத் மகமது அல் பரேக் (வயது 32). இவர் பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்று அல்கொய்தா இயக்கத்திலும் சேர்ந்து விட்டார். அமெரிக்கர்களை கொல்வதற்கு அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு இவர் ஆதரவு காட்டி வந்து உள்ளார். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் …

Read More »