Home / இலங்கை (page 2)

இலங்கை

வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவது தொடர்பான இராணுவ அறிக்கை

வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவதாக தொடர்பான அறிக்கை ஒன்று இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, இலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த காலத்தினுள் நாட்டிற்காக சிறந்த சேவையாற்றி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவம் தற்பொழுது அரசினால் ஆரம்பித்திருக்கும் இனத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுகின்றன. இருந்த போதிலும் இராணுவத்தினால் நாட்டின் எதிர்காலத்தின் நிமித்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல்வாதிகள் …

Read More »

புதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்

போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இன்று (15) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவிக்கின்றனர். இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது. அதன்படி குறைந்த பட்ச தண்டப் பணமாக 500 விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த தண்டப் பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை தனியார் …

Read More »

அடுத்த மாத இறுதிக்குள் க.பொ.த மாணவர்களுக்கு அடையாள அட்டை

இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் இறுதிக்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தகவல் தருகையில், முன்னெடுக்கப்பட்ட துரிதமான வேலைத்திட்டத்தினால் அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாடு செயற்றிறன் மிக்கதாக இடம்பெற்றதே இதற்குக்காரணம் என்றார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண …

Read More »

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் தாய்லாந்து பிரதமர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு இடம்பெற உள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் தாய்லாந்து பிரதமர் கண்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரவிக்கப்படுகிறது. இதன்போது தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட உள்ள அவர் இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

Read More »

நாடு முழுவதும் 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்

நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் …

Read More »

1.8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்

1.8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த UL 319 விமானத்தில் வருகை தந்த 28 வயதுடைய நபரே நேற்று (12) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 290.25 கிராம் நிறையுடைய 9 துண்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை சுமார் 1,886,625 ரூபா பெறுமதி உடையவை …

Read More »

வட மாகாணம் முழுவதும் சனி , ஞாயிறு மின்வெட்டு

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் வெட்டு வடக்கு மாகாணத்தில் அமுலில் இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வவுனியா, …

Read More »

ஏ-9 வீதியில் நடந்த கொடூரம்- மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் …

Read More »

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் கைது

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சியராலியோன் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேபநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் …

Read More »

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி

காட்டு யானை தாக்கியதில் அம்பன்பொல, பத்தினகம பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) இரவு இந்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பத்தினிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது. அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »