Breaking News
Home / இலங்கை

இலங்கை

தம்புள்ளையில் ‘ஏசி‘ அறைக்குள் 19 வயது இளைஞனும் 32 வயதுப் பெண்ணும் சடலங்களாக மீட்பு

தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பணியாளர்கள் இரண்டு பேர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 32 வயதான பெண் ஒருவரும், 19 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் விச வாயுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவர்களது பிரேத பரிசோதனை இன்றையதினம் தம்புள்ளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட உள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு …

Read More »

போதையின் உச்சத்தில் ஒருவர் அடித்தது கொலை?

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய உபைத்துள்ளா சஹீர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் அருகே காலியான மதுபோத்தலும் நொருக்குத்தீனியும் காணப்படுவதால் மதுபோதையில் ஏற்பட்ட தகராரில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் …

Read More »

பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இருவர் விளக்கமறியலில்

முகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவர் கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது இன வெறித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டபோது இவர்களுள் ஒருவர் அவற்றை நியாயப்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்பு கருத்துக்களை தெரிவிக்க, மற்றவர் …

Read More »

கல்லீரல் நோயால் உயிருக்குப் போராடும் 03 வயது சிறுவன் சிகிச்சைக்காக இந்தியா பயணம்

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருந்த 03 வயதுடைய சாமிக ஹர்ஷன என்ற சிறுவன் இன்று சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நவகத்தேகம பிரதேசத்தில் கல்லீரல் நோய் பாதிப்பால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் சோக சம்பவம் தொடர்பில் அத தெரண இதற்கு முன்னர் செய்தி வௌியிட்டிருந்தது. 05 வயதுடைய ஜினுலி பிந்தராவிற்கு ஒன்றரை வருடத்திற்குள் கல்லீரல் மாற்று …

Read More »

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள்

2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட 24 பேர் கடந்த 2017ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 3601 பேர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் …

Read More »

03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் 03.52 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி சந்தேகநபருக்கு எதிரான நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஆயுள்கால …

Read More »

பிறந்த உடனேயே குழந்தையை மண்ணில் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய்

குழந்தை ஒன்றை பிறந்த உடனேயே குழிதோண்டி புதைத்த தாய் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை, நிகவட்டவன பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ம் திகதி வீட்டில் வைத்து பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படியே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், பெண்ணின் கணவர் கடந்த 04 …

Read More »

டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் பலி (படங்கள்)

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பலகாமத்தில் இருந்து கருங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மூதூரில் இருந்து தம்பலகாமத்தை நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளும் இன்று (19) காலை 10.00 மணியளவில் சூரங்கல் பிரதேசத்தில் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தௌபிக் …

Read More »

இனி பேஸ்புக்கில் தவறு செய்தால் உங்களுக்கு இதுதான் தண்டனை!

இலங்கையில்,  சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் அல்லது வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா கருத்து …

Read More »

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

பேலியகொட மேம்பலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தில் மோதியதிலேயே இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »