Sunday , February 18 2018
Breaking News
Home / யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழில் காணாமற்போன குடும்பஸ்தர் எலும்புக்கூடாக இன்று மீட்பு!! பெரும் பரபரப்பு

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம்சுரேஸ்குமாா் வயது 56 என ஆடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறிச் சென்றுள்ளாா். இவ்வாறு ஒரு வாரமாக …

Read More »

யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பில் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபது தொடக்கம் இருபத்து மூன்று வயதுகளையுடைய குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக …

Read More »

காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்

எதிர்வரும் காலங்களில் காங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மைய நகரமாக காங்கேசன்துறையினை பிரகடனப்படுத்த எண்ணியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஐுன ரணதுங்க தெரிவித்தார். எதிர்வருங்காலங்களில் புகையிரத்தில் மட்டும் அல்ல சிறிய கப்பல்கள் மூலமாக எரிபொருட்களை காங்கேசன்துறைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அதன் ஊடாக அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். காங்கேசன்துறையினை மையமாக வைத்துக்கொண்டு வடமாகாணத்தில் அமைந்துள்ள 05 …

Read More »

யாழ் நீர்வேலி அத்தியார் கல்லுாரிக்கு முன்னால்விபத்து!! குருக்கள் படுகாயம்!!

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுாரிக்கு முன்னால் ஏற்பட்ட விபத்தில் கோயில் குருக்கள் படுகாயமடைந்துள்ளார். பின்னால் வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் திருப்பியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகின்றது. கோயில் குருக்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Read More »

ததேகூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் முதல்வர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் முதல்வர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவிற்கு நாம் கட்டுப்படுகிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான சொலமன் சூ.சிறில் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் யாழ் மாநகர சபையில் பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டமைப்பு நிர்வாக ஆட்சியமைக்க தீர்மானித்தள்ளதாகவும் அதனடிப்படையில் மாநகர முதல்வராக முன்னாள் மாகாண சபை …

Read More »

வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன் விசப் போத்தல்களுடன் ஆசிரியர்கள்!! நடந்தது என்ன?

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறித்த போராட்டத்தை மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும், யாழிலும் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் அது தடைப்பட்டுள்ளது. இதையடுத்தே வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் …

Read More »

யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்

யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் துணை மேயராக து. ஈசன் ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்த்தினர் தெரிவித்துள்ளனர்.  உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், ஆட்சி அமைப்பதில் பல சிக்கல் நிலமைகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் இன்று (14) யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் …

Read More »

வடக்கு நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டமைப்பும் – முன்னணியும் இணக்கம் எனத் தகவல்

வடக்கு மாகாணத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தில் தொங்கு நிலை ஏற்­பட்­டுள்­ளது. சபை­க­ளின் நிர்­வா­கத்தை திறம்­பட முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும் இணைத்து ஆட்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்­கான முயற்­சி­கள், வர்த்­தக சங்­கத்­தா­லும், சிவில் அமைப்­புக்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளா­லும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இரு தரப்­புக்­க­ளு­டன் முதல்­கட்­டப் பேச்சு முடி­வ­டைந்துள்­ளது என்று யாழ்ப்பாணத்து தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்­ளூ­ராட்சி …

Read More »

முள்ளிவாய்க்காலில் வெடிவிபத்து; சில வீடுகளுக்கு சேதம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன. சில வீடுகளுக்கு சிறிதளவான …

Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளிலும் த.தே.கூ வெற்றி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரைச்சி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கரைச்சி பிரதேச சபை த.தே.கூ சுயேட்சைக்குழு த.தே.மு (அ.இ.த.கா) பச்சிலைப்பள்ளி பிரதேச சபை த.தே.கூ 6 சுயேட்சைக்குழு 4 த.தே.மு (அ.இ.த.கா) 1 சு.க 1 ஈ.பி.டி.பி 1 பூநகரி பிரதேச சபை த.தே.கூ 11 …

Read More »