Breaking News
Home / இந்தியா

இந்தியா

‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.  இந்நிலையில் 27.07.2018  அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் …

Read More »

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #SalmanKhan #BlackbuckPoachingCase பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு …

Read More »

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நேற்று (17) பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மஹிளா நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 3.30 மணியளவில் …

Read More »

எஸ்பிகே நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு – ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்

அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தில் இரண்டு நாட்களாக நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை …

Read More »

பெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு

டெல்லியில், சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதே நீதிமன்றின் மூத்த வழக்கறிஞராக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், நீதிமன்றில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் மதுபோதையில் தன்னை கற்பழித்து விட்டதாக அவர் கூறினார். இதனால், மூத்த வழக்கறிஞரை பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை …

Read More »

கேரளாவில் நிபா வைரஸ் யாரால் பரவியது?- சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #NipahVirus கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதற்கு பழந்திண்ணி வவ்வால்கள் காரணம் என்று கூறப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் …

Read More »

3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3 ஆவது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது. அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லீட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது. …

Read More »

பாலியல் குற்றவாளிகளுக்கு வாகன உரிமம் ரத்து, ஓய்வூதியம் கிடையாது!

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளது. இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் …

Read More »

நிர்மலாதேவி வழக்கில் 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் …

Read More »

வெறிநாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான். …

Read More »