Breaking News
Home / சினிமா (page 30)

சினிமா

பாகுபலி 3 எடுக்கிறாரா ராஜமௌலி?

‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘பாகுபலி 3’ படத்தை ராஜமௌலி உருவாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்கள் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அடுத்ததாக ராஜமௌலி யாரை வைத்து படம் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். …

Read More »

மீண்டும் ஒரு பாரதியார் பாடலுடன் கும்மி அடிக்கும் லட்சுமி குறும்பட டீம்

யூ டியூபில் வெளியாகி பலதரப்பினரின் எதிர்ப்பை சந்தித்த ‘லட்சுமி’ குறும்படக் குழுவினர் மேலும் ஒரு பாரதியார் பாடலுடன் மீண்டும் குறும்புடன் கும்மியடிக்க வந்துள்ளனர். யூ டியூபில் வெளியாகி பலதரப்பினரின் எதிர்ப்பை சந்தித்த ‘லட்சுமி’ குறும்படக் குழுவினர் மேலும் ஒரு பாரதியார் பாடலுடன் மீண்டும் குறும்புடன் கும்மியடிக்க வந்துள்ளனர். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; …

Read More »

பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாச்சியார் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. பாலா இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் மக்கள் விரும்பும்படி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் நாச்சியார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் …

Read More »

விஜய் அரசியலில் குதிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக நடிகர் விஜய் உள்ளார். அவருக்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் விஜய் நடித்த புதிய திரைப்படங்கள் வெளிவரும்போது ரசிகர்கள் எந்தளவுக்கு அதை கொண்டாடுகிறார்களோ அதே போல கேரள ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிடுவார்கள். சமீபத்தில் விஜய் நடித்து வெளியாகி உள்ள ‘மெர்சல்’ திரைப்படம் …

Read More »

நடிகர் வீராவுடனான காதல் குறித்து மனம்திறந்த நமீதா

‘மியா’ படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரியை நடிகை நமீதா திருமணம் செய்யவுள்ள நிலையில், அவருடனான காதல் குறித்து நடிகை நமீதா மனம் திறந்துள்ளார். நடிகை நமீதா அவருடன் ‘மியா’ படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை காதலித்து திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி திருப்பதியில் நடைபெறுகிறது. வீராவை காதலித்தது எப்படி? திருமணத்துக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்து நமீதா …

Read More »

பாலா – துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான தலைப்பு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக …

Read More »

பூஜையுடன் தொடங்கியது அண்ணன், தம்பி ஆட்டம்

அண்ணன் சூர்யா தயாரிப்பில் தம்பி கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்க இருக்கிறார். ‘பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸானது. இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் …

Read More »

பொங்கல் ரேசில் பிரபுதேவா

சூர்யா, விஷால், விமலை தொடர்ந்து நடிகர் பிரபுதேவாவும் தனது படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விமலின் மன்னர் வகையறா மற்றும் விஷாலின் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்கெட்ச் படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் …

Read More »

காதல் வலையில் விழுந்த இளம் ஜோடி

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம். பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம். அதன் பிறகு பெரிய முதலாளி வீட்டில் யாருக்கும் காதல் வரவில்லை என்ற நிலையில், இளம் நடிகரும், அந்த கேட்வாக் அழகியும் காதலில் விழுந்துள்ளார்களாம். இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை …

Read More »

பாட்டுப் பாடி ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம்

விக்ரம் மகள் அக்‌ஷிதாவின் திருமண வரவேற்பில், ரசிகர்களின் சந்தோஷத்திற்காக பாட்டுப் பாடி அவர்களை மகிழ்வித்திருக்கிறார். சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா …

Read More »