Breaking News
Home / Tag Archives: #Covid-19 #Corona Virus #Sri Lanka

Tag Archives: #Covid-19 #Corona Virus #Sri Lanka

ஸ்ரீலங்காவில் கொரோனா பரவல் தொடர்பில் ஆறுதலளிக்கும் செய்தியை வெளியிட்ட சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை சமூகத்திற்குள் நோயாளிகள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஒரு நோயாளியேனும் சமூகத்திற்குள் இருந்து பதிவாகவில்லை …

Read More »

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் ஒன்றரை வயதுக் குழந்தை பாதிப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு ஒன்றரை வயதுக் குழந்தை பாதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் பதிவாகி உள்ளது. நேற்று ஸ்ரீலங்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 8 பேர் கடற்படையினர் எனவும், இருவர் அவர்களின் உறவினர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இருவர்களில் ஒன்றரை மாத குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதற்கு முன்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாயின் ஒன்றரை வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஸ்ரீலங்காவில் ஒரேயொரு பயணியுடன் பயணித்த புகையிரதம்!

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் புகையிரதத்தில் பயணிப்பதற்காக பெலியத்தை புகையிரத நிலையத்திற்கு ஒரு பயணி மாத்திரமே வந்துள்ளார் என தெரியவருகிறது. ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 5.10 மணிக்கு பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகள் புகையிரதம் இயக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் கொழும்பு செல்ல வசதியாக இந்த புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் பெலியத்தையில் இருந்து பயணிக்க மூன்று பேர் மாத்திரமே பதிவு …

Read More »

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு

யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் இந்த தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நிலையில், 17 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல …

Read More »

ஸ்ரீலங்காவிற்கு உதவிக்கரம் நீட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்

உலக சுகாதார ஸ்தாபனம் 151 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்கியுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்று அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த உதவியை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்காப்பு அங்கிகள் உள்ளிட்ட கருவிகள், கொவிட்-19 பரிசோதனை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது. உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் சுகாதார அமைச்சரிடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் …

Read More »

முடி வெட்ட மட்டுமே அனுமதி : தாடி, மீசை வெட்ட முடியாது

ஸ்ரீலங்காவில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். தாடி மற்றும் மீசை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உதடுகள் மற்றும் வாயுடன் தொடர்புகளை தடுக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிகை அலங்கார மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதும் அதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க அனைத்து மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு …

Read More »

பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவோ சம்பளத்தை குறைக்கவோ அனுமதி இல்லை! அரசாங்கம் அறிவித்தல்

நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பணியாளர்களுக்கு அநீதி …

Read More »

நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது

ஸ்ரீலங்காவில் நேற்று இறுதியாக இனங்காணப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பான விபரம் வெளியாகி உள்ளது. இதன்படி நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 பேரில் 12 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏனைய மூவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

விடுமுறையை முடித்துக் கொண்டு முகாமுக்கு திரும்பிய கடற்படை சிப்பாய்க்கு கொரோனா

கேகாலை – ஹெட்டிமுல்ல, வதுர பிரதேசத்தை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசரை கடற்படை முகாமை சேர்ந்த இந்த சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்று முகாமுக்கு திரும்பியுள்ளார். இதன் போதே நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கடற்படை சிப்பாயின் குடும்பத்தினர், அவரது சகோதரரின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 11 பேர் காலி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் …

Read More »

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் 07 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரங்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பில் 160 பேரும், களுத்துறையில் 65 பேரும், கம்பஹாவில் 53 பேரும், புத்தளத்தில் 41 பேரும், குருநாகலில் 27 பேரும், யாழ்ப்பாணத்தில் …

Read More »
error: Content is protected !!