Breaking News
Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

யாழில் மரணித்து போன மனிதாபிமானம்! பரிதாபமாக ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தின் போது குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி எனும் (42) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனமொன்று மோதித் தள்ளியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் படுகாயமடைந்ததும், 119 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தபோதும், …

Read More »

யாழ்.தேவி புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் யாழ்.தேவி புகையிரதத்துடன் மோதுண்டு பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் உள்ள புகையிரத கடவையில் இன்று காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளரான 31 வயதுடைய நிலாந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதன்போது காயங்களுக்குள்ளான அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை …

Read More »

யாழில் வெடி பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

யாழ்ப்பாணம் – அலியாவலாய் கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுக்கு சமமான 15 கிலோ கிராம் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கடற்படையின் உதவியுடன் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர், லெப்டினன் கெமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். குறித்த பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

யாழில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்குதல்

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். அத்துடன், வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இரவு 9.30 அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச …

Read More »

பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை! அனுமதி கொடுத்தது சர்வதேச வான் போக்குவரத்து சங்கம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்திடம் (IATA) இலங்கை அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மாகாணத்தில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக பணிகள் நடைபெற்றுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து பலாலியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான பயணத்தினை இங்கிருந்து மேற்கொள்ள முடியும் என்றும், அதற்கான …

Read More »

யாழில் அடையாளம் தெரியாதவர்களால் அதி சொகுசு கார் சேதம்

யாழ்.ஆனைக்கோட்டை, உயரப்புலம் பிடாரி அம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசு கார் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது வீட்டு கண்ணாடிகளும், அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்ட குறித்த வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் வீட்டுக்கு அழைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர் உணவருந்தாமல் சென்றதனால் வீட்டு …

Read More »

இளைஞர்களை விரட்டி விரட்டி கொட்டிய குளவிகள்! சம்பவ இடத்தில் பலியான முதியவர்

யாழ்.ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ள துடன், மேலும் சிலா் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா (வயது-63) என்ற முதியவரே உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து ஆலயத்திலிருந்த பக்தர் இடைய குழப்ப நிலை காணப்பட்டது. ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தில் வருடாந்தத் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா நடைபெற்றது. மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா …

Read More »

யாழ். பல்கலைக்கழக கிளை வளாகத்தில் கடும் மோதல்! ஒன்பது மாணவர்கள் காயம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

யாழில் அதிகாலையில் நடந்த சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார். விபத்து சம்பவம் வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நவிண்டில் பகுதியை சோ்ந்த முகுந்தன் கிரிஷாந்த் என்ற இளைஞனே சம்பவத்தில் …

Read More »

நேற்று இரவு இடம்பெற்றுள்ள கோர சம்பவம்…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்துடன் இரு இளைஞர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் கிளிநொச்சி அரவியல்நகர் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு இளைஞர்களும் தொடரூந்து வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், தொடரூந்து வருவதனை அவதானிக்காமையினால் விபத்து நேர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கிளிநொச்சி காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More »