Breaking News
Home / Tag Archives: #உலகம்

Tag Archives: #உலகம்

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்

புதிய கொரோனா வைரஸ் சீனாவின் மத்திய நகரமான வுகான் நகரத்திலிருந்து பரவியது. சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யும் இந்த வைரஸினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த புதிய வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து மனிதர்களிடமிருந்தே மனிதரிடையே பரவும் என கண்டறியப்பட்டது. சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா,தாய்லாந்து மற்றும் தைவான் …

Read More »

சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவும் இந்த காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய கொரோனா …

Read More »

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசி உள்ளனர். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை …

Read More »

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஏவுகணை தாக்குதலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக …

Read More »

அரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்

இங்கிலாந்து இளவரசராக இருந்த ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத்தும் ஆதரவு தெரிவித்தார். மேலும் பங்கிஹாம் அரண்மனையும் அவர்கள் அரச கடமையில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது. அரச பதவியை துறந்த பின், முதன்முறையாக ஹாரி சென்டபெல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘மேகனும் நானும் …

Read More »

அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வைரல் வீடியோ

அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஆயுதம் ஈரான் ஏவுகணைகளை தாக்குவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 2.50 நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோவில், வான்வெளியில் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ: “இதனால் தான் ஈரான் ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கவில்லை. இவை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு தாக்குதல்கள். பார்க்கவே பயங்கரமாக உள்ளது.” எனும் …

Read More »

ஏமனில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது. அதிபர் ஆதரவு படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த உள் நாட்டுப்போரில், ஏமன் தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் …

Read More »

நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை ராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 119 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி) செலவாகும். கடல் சுவரை கட்டி முடிப்பதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என அவர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் …

Read More »

நேபாளத்தில் உலகின் குள்ள மனிதர் மரணம்

உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் ககேந்திர தபா. 27 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் …

Read More »

சீனாவில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவு

சீனா கடந்த 1949-ம் ஆண்டு முதல் கம்யூனிச நாடாக உள்ளது. இந்த அரசு தொடங்கியது முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சட்டமாக்கப்பட்டது. அன்று முதல் அங்கு மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் குறைந்தது. அதனால் குழந்தைகள் பாதிப்பு விகிதம் ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் தேசிய மக்கள் தொகை …

Read More »