Breaking News
Home / Tag Archives: இலங்கை

Tag Archives: இலங்கை

கடற் படையினால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்

புத்தளம் – எரம்புகொடெல்ல கடற் பரப்பில் கைவிடப்பட்டு செல்லப்பட்டிருந்த இரு படகுகளில் இருந்து பீடி இலை தொகைகள் கடற் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 980 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக கொழும்பு சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற் படை தெரிவித்துள்ளது

Read More »

காலவரையறையின்றி மூடப்பட்ட முகாமைத்துவ பீடம்

மாணவர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கெமராவினை பொறுத்துவதற்னாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் குறித்த பீடத்தில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை செய்துள்ளனர். 47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதான சிறுமியொருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபரை, சிறுமியின் தந்தையும், ஊர் மக்களும் இணைந்து தாக்கியுள்ளனர். இதன்போது குறித்த நபர் …

Read More »

இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இரண்டு மாவட்டங்களிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும். மணி சரிவினால் ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. …

Read More »

கொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்கள்

கொழும்பில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக விபச்சார தொழிலில் ஈடுபட்ட சீன மற்றும் ரஷ்ய நாட்டவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, பம்பலப்பிட்டியில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட அதிகாரிகள், …

Read More »

கடல் நீர் நிலப்பகுதிக்குள் வரலாம்! இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2019 ஜுலை 20ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதி, மத்திய மலைநாடு மற்றும் வடமேல், மேல், தென்மேல், தென் கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக மேல், …

Read More »

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு நேர்ந்த கதி

அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை நேற்றைய தினம் முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த போதும் விலை அதிகரிப்பிற்கான காரணம் என்னவென தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து பாண், பனிஸ் உட்பட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் …

Read More »

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நோய்! 40 பேர் பலி – 27 ஆயிரம் பேர் வரையில் பாதிப்பு

மழையுடன் கூடிய கால நிலையையடுத்து நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொடர்பில் அலட்சியம்செய்ய வேண்டாம் என்றும் டெங்கு பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியமெனவும் அப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்துகிறது. இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 40பேர் டெங்குநோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 27,088பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பிரிவு தெரிவித்தது. 2019ஜூலை 10ம் …

Read More »

பெண் ஒருவரின் கொடூர செயல் – கணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பலாங்கொட, பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் ஆண் ஒருவர் மீது பெண்ணொருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். வீட்டின் ஜன்னல் ஊடாக நுழைந்த பெண் ஒருவர், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த அனர்த்தத்தில் பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் …

Read More »