Breaking News
Home / Tag Archives: #இந்தியா

Tag Archives: #இந்தியா

ஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது. ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 3-வது பெரிய …

Read More »

நாடு முழுவதும் மதுவிலக்கு – பிரதமருக்கு பள்ளி மாணவன் கடிதம்

மதுவிலக்கு குறித்து போராடி வரும் பள்ளி மாணவன் ஆகாஷ் ஆனந்தன் (வயது 10), சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 3 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்த 3 ஆண்டு கால பிரசாரத்தில் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, முழுமையான மது இல்லாத நாடு சாத்தியம் என்பதை உணர்ந்தேன். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த …

Read More »

இன்று 130வது பிறந்தநாள்- நேரு நினைவிடத்தில் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, …

Read More »

முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் 1960-ம் ஆண்டு உருவானதை தொடர்ந்து, இதுவரை 18 பேர் முதல்-மந்திரி பதவி வகித்து உள்ளனர். இதில் முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை பெற்றவர், யஷ்வந்த் ராவ் சவான். மராட்டிய அரசியலில் தற்போது நடைபெற்ற குழப்பம் புதிது அல்ல. பல முறை அரசியல் குழப்பங்கள் காரணமாக முதல்-மந்திரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பல முதல்-மந்திரிகள் ஓராண்டு, 2 ஆண்டுகள் மட்டுமே தங்களது பதவியை தக்க வைக்க …

Read More »

அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது முதலாவது மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை 5-ந் தேதி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்தில், பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். உள்நாட்டு நிறுவனங்களுக்கான கம்பெனி வரியை 8 சதவீதம் குறைத்தார். புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் சலுகை அளித்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மதிப்புள்ள சலுகைகளை …

Read More »

திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குண்டறா அடுத்துள்ள முல வண்ணம் பகுதியை சேர்ந்தவர் வைசாக் பைஜூ (வயது 28). இவரது மனைவி கிருதிமோகன் (25). கிருதிமோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்து 2-வதாக வைசாக் பைஜூவை கடந்த 9 மாதத்துக்கு முன்பு கிருதிமோகன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஆரம்ப காலத்திலேயே …

Read More »

சபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கிவிட்டது. தலைமை நீதிபதி ஓய்வு பெற இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், அதற்கு முன் அவர் தலைமையிலான அமர்வில் உள்ள 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் …

Read More »

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தககவல் கிடைத்ததையடுத்து, இன்று பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கி …

Read More »

அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு

அ.ம.மு.க.வில் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும், பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தினகரனுக்கு எதிராக புகழேந்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, புகழேந்தி சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வரை சந்தித்ததாக கூறினார். அப்போது அவர் விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற தகவல் வெளியானது. …

Read More »

புல்புல் புயல் பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது. வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் …

Read More »