இது..உங்களுக்காக !

Posted By admin On Saturday, March 26th, 2011 With 0 Comments

வணக்கம் நண்பர்களே!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்களுடன், நாளும் இணையவழியில் தொடர்பாடல் புரிந்து வரும் யாழ்ஓசையின் வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு பரிமாணமாக, தினமும்  வாசகர் படைப்புக்களுக்குக்  களம் அமைத்துத் தரும் புதிய பகுதி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம்.

இது..உங்களுக்கே உங்களுக்காக !

இப்பகுதிக்கு ஆர்வமுள்ள எவரும் தமது படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். அது அவர்களது ஆர்வத்தினை, திறமையை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இருப்பதோடு, அவர்களுக்குப் பரந்த அறிமுகத்தினை, சன்மானத்தினை, விருதினை,  பெற்றுத் தரும் அரிய சந்தர்ப்பமாகவும் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு  தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஹல்லோ!.. எங்க கிளம்பிட்டீங்க.. உங்க படைப்பினை அனுப்பி வைக்கவா..? ஓ..தாராளமாக அனுப்பி வைக்கலாம் அதற்கு முன், அது குறித்த மேலதிக விபரங்களையும் சற்று வாசித்துவிட்டு, அதற்கமைவாக அனுப்பலாமே..!

இப் பகுதிக்கு  உங்களது சுயமுயற்சியில் உருவான படைப்புக்கள் எதனையும் அனுப்பி வைக்கலாம். உங்கள் படைப்பு, கதை, கவிதை, துறைசார் கட்டுரை, கலை விமர்சனம், அனுபவக் குறிப்புக்கள், ஒலிப்பத்தி, பாடல், புகைப்படம், வீடியோ, குறும்படம், நடனம், ஓவியம், என எதுவாகவும் இருக்கலாம்.

நீங்கள் அனுப்பும் படைப்புக்கள், இதுவரையில் இணையத்தில் வெளியாகாதிருத்தல் முக்கியமானது.  அவ்வாறான படைப்புக்களுக்கே  முக்கியத்துவமும் முன்னுரிமையும்  தரப்படும்.

உங்கள் படைப்புடன் தனியாக உங்கள் புகைப்படம் (விரும்பினால்)மற்றும் சுய அறிமுகக் குறிப்பு ஒன்றினையும், உங்களுடனான தொடர்பு விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும்.  உங்களைப்பற்றிய மேலதிக விபரங்கள் வெளிப்படுத்த நீங்கள் விரும்பவில்லை எனில், உங்களுக்கான புனை பெயருடன்,  அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்களது சுய விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. நீங்கள் ஒரு வலைப்பதிவராக இருப்பின், உங்கள் வலைப்பதிவின் முகவரியை இணைத்து அனுப்பினால், உங்கள் வலைப்பதிவுக்குரிய இணைப்பு தொடுக்கப்படும்.

உங்கள் படைப்புக்களுடன், நீங்கள் விரும்பினால்  யாழ்ஓசை குறித்து,  தாங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் குறிப்பிட்டு அனுப்பலாம்.

உங்கள் சுய விபரக் குறிப்புக்களில்.  தங்களது பெயர், வயது, கல்வி அல்லது பணி, முகவரி, தொலைபேசி எண், என்பனவற்றைக் குறிப்பிடுவது, உங்கள் படைப்பு சிறந்ததாக தெரிவு செய்யப்படும் போது உங்களை இலகுவாகத் தொடர்பு கொள்ள உதவும்.

புகைப்படங்கள், வீடியோக்கள், ஒலிப்பத்திகள், ஓவியங்கள் அனைத்தையும் மின்னஞ்சல் வழியே அனுப்பி வைக்கலாம். அளவு கூடிய கோப்பாக இருப்பின் ஒரு பகுதியினை அனுப்புவதோடு, கோப்பின் மொத்த அளவினைத் தெரியப்படுத்தினால், முழுமையாக அனுப்பி வைப்பதற்குரிய வழிமுறை அறியத்தரப்படும்.

மேலே குறிப்பிட்ட பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படைப்பினை நீங்கள் அனுப்பி வைக்கலாம். சிறந்ததென யாழ்ஓசை குழுமத்தினால் தெரிவு செய்யப்படும் படைப்புக்கே முன்னுரிமை தரப்படும்.

உங்கள் படைப்புக்கள் யாவும் editor@yarlosai.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

யாழ்ஓசை இலவச மின்னஞ்சல் சேவை மூலம், வெளியாகும் படைப்புக்கள் குறித்த விபரங்களைத் தினமும் பெறமுடியும்.

படைப்புக்களுக்கான படைப்புரிமை, படைப்பாளிகளுக்கும், பிரசுர உரிமை யாழ்ஓசைக்கும் உரியதாகும்.

பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள படைப்புக்கள் குறித்து காலக்கிரமத்தில் படைப்பாளருக்கு அறியத்தரப்படும். அவ்வாறு அறியத் தரப்பட்ட படைப்பினை, பிறிதொரு இடத்தில் வெளியிடல் கூடாது. அவ்வாறு வெளியிடப்படும் பட்சத்தில், அது சண்மானம், மற்றும் விருது என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளும் தேர்வில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.

படைப்புக்களுக்கான சன்மானம், விருது:

பார்வையிடும் வாசகர் எண்ணிக்கை அடிப்படையிலும்,யாழ்ஒசை  குழுமத்தின் தெரிவின் அடிப்படையிலும், தேர்ந்தெடுக்கும் படைப்புக்களுக்கு சன்மானமும், சிறந்த படைப்புக்கு சிறப்பு விருதும் வழங்கப்படும்.

இது குறித்த விபரங்கள், படைப்பாளிகளுக்குத் தனிமடலில் தெரிவிக்கப்படுவதோடு, உரிய காலப்பகுதியில் யாழ்ஓசையிலும் வெளியிடப்படும்.

நாங்க ரெடி..நீங்க..?

யாழ்ஓசையின்  இனிய வாசகராகிய உங்களையும், உங்களது படைப்பினையும்,  உலகெங்கிலுமுள்ள வாசகர் மத்தியில் பெருமகிழ்வோடு அறிமுகம் செய்து வைக்கவும், அதற்கான உங்கள் படைப்புக்கு பணமும், பரிசும் தரவும் நாங்க ரெடின்னு சொல்லிட்டோம்…நீங்க..?

கிளம்பிட்டீங்களா..?

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

-யாழ்ஓசை குழுமம்

மேலதிக தொடர்புகளுக்கு

editor@yarlosai.com

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>