Home / latest-update / புது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்?

புதுசா ஒரு காலணி மாடல் வந்தாலே போதும் அதை வாங்கி நம் காலுக்கு அழகு பார்க்கவில்லை என்றால் நமக்கு தூக்கமே வராது. அப்படி ஆசைப்பட்ட காலணி உங்களுக்கு அசெளகரியத்தை உண்டு பண்ணா என்ன செய்வீர்கள். காலை கடித்தல், கொப்புளங்கள், காயங்களை ஏற்படுத்தினால் போதும் அதை போட முடியாமல் நாம் மிகவும் தவித்து போய்விடுவோம். மனதிற்குள் ஆசையா இருக்கும் எனினும் ஒரு நல்ல சுப நிகழ்ச்சிக்கோ அல்லது பார்ட்டிக்கோ போட்டு போனால் சிரமத்திற்கு உள்ளாகி விடுவமோ என்று பயந்து அதை போடுவதை தவிர்த்து விடுவோம்.

சரி இந்த பிரச்சினையை நாங்கள் கூறும் சிம்பிள் டிப்ஸ்களை கொண்டே சரி செய்து விடலாம். இனி உங்கள் காலணியும் வீட்டிலேயே வெறுமனே தூங்காமல் உங்கள் பாதங்களை அலங்கரிக்கும்

ட்ரிக்ஸ் காலணியின் கடினத் தன்மை தான் இதற்கு முதல் முக்கிய காரணமாக அமைகிறது. காலணிகளை சரியாக தேர்ந்தெடுக்காத சமயத்தில் காலை கடித்தல், கொப்புளங்கள், பாதத்தில் தடம் விழுதல் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. பேண்டேஜ் உங்கள் புதிய காலணிகள் கடிக்கும் சமயத்தில் குதிகால் பகுதிகளில் பேண்டேஜ் போட்டு கவர் செய்து கொள்ளலாம்.

பேண்டேஜ் போடும் போது கொஞ்சம் பெரிய பகுதியை சுற்றி கவர் செய்வது நல்லது. இல்லையென்றால் சில நிமிடங்களில் பிரிந்து கொண்டு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஒரு நொடிப் பொழுதில் உங்கள் காலணி பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம். முரடான சாக்ஸ் மற்றும் ஹேர் ட்ரையர் இது ஒரு எளிமையான பயன் தரக்கூடிய முறையாகும். நீங்கள் உங்கள் காலணிகளை அணிவதற்கு முன் சாக்ஸ்களை போட்டு அணியுங்கள். உங்கள் காலணிகள் இறுக்கமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால் ப்ளோ ட்ரையர் மூலம் வெப்பமான காற்றை செலுத்தி அதன் இறுக்கத்தை குறைக்கலாம்.

இந்த வெப்பமான காற்று காலணிகளை மென்மையாக்குவதோடு தளர்வாக வைக்க உதவுகிறது தேவைப்பட்டால் பல தடவை கூட இதை திரும்பவும் செய்யலாம். பேபி பவுடர் இது உடனடி பலன் தரும் ட்ரிக்ஸ் ஆகும்.காலணியின் எந்த பகுதி உங்களுக்கு கடிக்குதோ அல்லது அசெளகரியத்தை ஏற்படுத்துதோ அந்த இடத்தில் பேபி பவுடரை போட்டு நன்றாக தடவுங்கள். இவை காலணியால் ஏற்படும் உராய்வு கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

அதே மாதிரி டியோட்ரெண்ட் ஸ்டிக் கொண்டும் இதே பலனை பெறலாம். சிலிக்கான் ஸ்ட்ரிப்ஸ் காலணி கடைகள் அல்லது ஆர்த்தோபீடிக் கடைகளில் சிலிக்கான் ஸ்ட்ரிப்ஸ் கிடைக்கும். இவற்றை காலணியின் குதிகால் பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். இவை உராய்வை தடுத்து புதிய காலணியால் காலில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. வாட்டர் பேக் இந்த முறையில் நீங்கள் அணியவிருக்கும் காலணியில் வெதுவெதுப்பான நீர் கொண்ட பேக்கை வைக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக அது கசியாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பிறகு அதை இரவு முழுவதும் உறைய வைக்க வேண்டும். இப்பொழுது அந்த பேக்கில் உள்ள தண்ணீர் விரிவடைந்து காலணியின் வடிவத்தையும் அதிகப்படுத்த செய்யும். இதனால் உங்கள் காலணி சற்று நீட்சியடைந்து உங்களுக்கு செளகரியமாக மாறி விடும். அப்புறம் உங்கள் காலில் போட்டு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் அழகு பார்க்கலாம்.

வீட்டில் பயன்படுத்துதல் மற்றொரு எளிய ட்ரிக்ஸ் உங்கள் புதிய காலணிகளை வீட்டில் கொஞ்ச நேரமாவது போட்டு நடங்கள். இதனால் காலணிகள் விரிவடைந்து விரைவில் உங்களுக்கு ஏதுவாக மாறிவிடும். பேட்ஸ் மற்றொரு தீர்வு என்னவென்றால் உங்கள் அருகில் இருக்கும் செருப்பு தைப்பவரிடம் சென்று கடிக்கின்ற இடத்தில் எதாவது பேட்ஸ் மாதிரி வைத்து தைத்து கொள்ளலாம். இதுவும் உங்கள் காலணி பிரச்சினையை சரியாக்கி விடும். தேர்ந்தெடுக்கும் முறை காலணிகளை தேர்ந்தெடுக்கும் போது உங்களுக்கு பொருத்தமானதாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

உங்கள் பெருவிரல் பகுதிக்கும் காலணிக்கும் இடையே குறைந்தது 1 சென்டிமீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். அதேநேரத்தில் நல்ல தரமான காலணிகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் பாதச் சுமைகளைப் பொருத்து வளைந்து நெளிந்து கொடுக்கும் மென்மையான காலணிகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் பாதங்களுக்கு வலியை கொடுக்கும் காலணிகள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏதுவான காலணிகள் அமையும் வரை பொருத்து இருந்து தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி உங்கள் புதிய காலணியில் வலம் வாருங்கள்.

Check Also

நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்…!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அனைத்துஇலங்கையர்களின் ஒரே நோக்கமாக காணப்படுவது இலங்கையை கட்டியெழுப்புவதே என பிரதமர் மஹிந்த …

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!