Breaking News
Home / latest-update / யாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – இருவர் படுகாயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு சந்தனமாத கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.

சம்பவத்தில் இளைஞனின் தலை மற்றும் கையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றயவரான முச்சக்கர வண்டிச் சாரதியும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி..

2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் …

error: Content is protected !!