Breaking News
Home / latest-update / இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயற்சி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயற்சி

தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் இராமநாதபுரம் – திருவடனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் இரு சக்கர வாகனத்தை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த வாகனங்களில் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் 1.5 தொன் செம்மரக் கட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Check Also

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் …

error: Content is protected !!