Breaking News
Home / latest-update / வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை! வட மாகாண போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள தகவல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை! வட மாகாண போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள தகவல்

வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இலங்கை போக்குவரத்து சபையினால் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேருந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

தற்பொழுது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், வட மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஏழு சாலைகளிற்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றுவருகின்றது.

குறுகிய காலத்திற்கு முன்னர் இரண்டு ஆசனத்தில் ஒருவரும் 3 ஆசனத்தில் இரண்டு பேரும் என்ற அடிப்படையில் போக்குவரத்து சேவை இடம்பெற்று வந்தது. தற்போதைய நிலைமையில் ஆசன மட்டத்தில் பயணிகள் ஏற்றக்கூடியவாறு சுகாதார நடைமுறைகளை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை , இடம்பெற்று வருகின்றது. எனினும் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான சேவைகள் எவையும் இலங்கை போக்குவரத்து சபையினால் நடத்தப்படவில்லை. எனினும் எமது சாலைக்கு தொலைபேசி மூலமும் நேரடியாகவும் வருகை தந்து வடமாகாணத்திற்கு வெளியில் பஸ் சேவை இடம்பெறுகிறதா என மக்கள் வினவுகின்றனர்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையானது இன்றுவரை வடக்கு மாகாணத்திற்கு வெளியில் எந்த ஒரு பஸ் சேவையினையும் ஆரம்பிக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அத்தோடு எமது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி அதாவது முகக்கவசங்கள் அணிந்து பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்றார்.

Check Also

மும்பையில் ராணுவம் குவிப்பா?: மகாரஷ்டிரா மாநில மந்திரி விளக்கம்

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 758 பேர் …

error: Content is protected !!