Breaking News
Home / latest-update / சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்றம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்றம்

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் அதன் உரிமையாளர் என கூறப்படுவோரால் ஆலய குரு மாற்றப்பட்டதால் இன்று குழப்ப நிலை ஏற்பட்டது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. அதன் காரணமாக ஆலயத்திற்கு ஒரு சில தனிப்பட்ட நபர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் 11 வருடங்களாக நிர்வாகம் இயங்கவில்லை.

இருந்த போதிலும் அதன் உரிமையாளர் என சொல்லப்படும் ஒரு சிலர் மட்டும் தான் அதன் நிதி வளங்களையும் பூசை போன்றவற்றையும் தொடர்ந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக அங்கு பூஜை செய்து வரும் குருக்கள் திடீரென நிறுத்தப்பட்டு வேறு ஒரு அர்ச்சகர் ஆலயத்தில் காலை பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்டதை தொடர்ந்து அங்கு கூடிய கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று காலை பதற்றம் நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கொரோனா காலத்தில் ஆலயத்தில் இவ்வாறு ஒன்றுகூட முடியாது என கூறி உடனடியாக அனைவரையும் வெளியேற்றினர். சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர்களை விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

யாழ். வடமராட்சி கிழக்கில் இரு இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். …

error: Content is protected !!