Breaking News
Home / latest-update / யாழில் பொலிஸாரின் கை விரல்களை கடித்த இளைஞன்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் பொலிஸாரின் கை விரல்களை கடித்த இளைஞன்

யாழில் பொலிஸாரால் விரட்டி பிடிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரின் கை விரல்களை கடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் விரட்டி பிடிக்கப்பட்ட குறித்த போதைப்பொருள் வியாபாரி, வாய்க்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை மீட்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரல்களை கடித்துள்ளார்.

இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

பொலிஸாரை கண்டதும் அங்கிருந்த இளைஞன் ஓட்டம் பிடிக்கவே பொலிஸார் இளைஞனை விரட்டி பிடித்துள்ளனர். இதன்போது அவ் இளைஞன் தனது உடைமையில் இருந்த போதைப்பொருள் பைக்கெற்றை விழுங்குவதற்காக வாய்க்குள் போட்டபோது விரைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இளைஞனின் வாய்க்குள் கைவிட்டு போதைப்பொருளை மீட்க முயன்றுள்ளார்.

இதன்போதே பொலிஸாரின் கை விரல்களை இளைஞன் கடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞன் உடனடியாக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Check Also

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைட்டில் இருந்து நாடு …

error: Content is protected !!