Breaking News
Home / latest-update / யாழில் சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவரை நையப்புடைத்த கிராம மக்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவரை நையப்புடைத்த கிராம மக்கள்

தென்மராட்சிப் பகுதியில் மது அருந்தப் பணம் கொடுக்காத பாடசாலை மாணவனை தாக்கிய ஒருவரை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொரோனா தொற்றின் பின்னர் தென்மராட்சி மட்டுவில் மாவித்தியாலயத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் அந்த விற்பனை நிலைய உரிமையாளரும் இன்னொருவரும் மது அருந்தியுள்ளனர்.

16 வயதான மாணவரொருவர் அந்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்துள்ள நிலையில் அந்தச் சிறுவனிடம் மது அருந்த ஒருவர் பணம் கேட்டுள்ளார். சிறுவன் பணம் கொடுக்க மறுத்தபோது கத்தியால் சிறுவனை தாக்க முயன்றுள்ளார். இதன் போது சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்ட அந்தப்பகுதி மக்கள் குறித்த நபரை நையப்புடைத்த வேளை அவரது தலையில் பெரிய வாள் வெட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நடு வீதியில் அவரது மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சிறுவனும் தாக்குதலை மேற்கொண்ட நபரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Check Also

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் …

error: Content is protected !!