Breaking News
Home / ஏனையவை / காணொளி ஊடாக இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

காணொளி ஊடாக இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகள்

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை செயல்பாடுகளை வெற்றிகரமாக நடத்தும் திட்டத்தின் கீழ் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியது. புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முதல் சோதனைத் திட்டமாக இது மேற்கொள்ளப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, வெலிகடை சிறைச்சாலையின் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு பதிலாக, அவர்களை சிறைச்சாலையில் இருந்தே காணொளி ஊடாக நீதிமன்றத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Check Also

சற்று முன்னர் ராஜித்த சேனாரத்னவின் வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்…!(காணொளி)

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை தேடி பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் …

error: Content is protected !!