Breaking News
Home / latest-update / யாழில் மனைவியின் தங்கையை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபர்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் மனைவியின் தங்கையை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபர்!

கொடிகாமம் – வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் கணவன் – மனைவியின் சண்டையை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில காலமாக பிரிந்துவாழும் கணவன், நேற்று மாலை மனைவியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார்.

அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத்தியால் குறித்த பெண்ணை சரமாரியாக வெட்டியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலுமு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Check Also

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைட்டில் இருந்து நாடு …

error: Content is protected !!