Breaking News
Home / latest-update / திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறு தினம் இடம் மாற்றப்படுவதாக அறிவிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறு தினம் இடம் மாற்றப்படுவதாக அறிவிப்பு

தற்காலிகமாக கலாசாலை வீதியில் இயங்கி வந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறு தினம் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பொதுச் சந்தைகளை திறந்து மக்கள் ஒன்று கூடினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தையும் மக்கள் ஒன்று கூடாத வண்ணம் சமூக இடைவெளியினை பேணக்கூடிய வகையிலான மாற்று இடங்களில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நல்லூர் பிரதேசசபையின் ஆளுகையில் கீழ் உள்ள யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக திருநெல்வேலி கலாசாலை வீதியில் இடம்பெற்று வந்தன.

எனினும் குறித்த பகுதியில் சன நெருக்கடி அதிகரித்து காணப்படுவதாகவும், மழை நேரம் என்பதால் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் அந்த சந்தையினை வேறொரு இடத்திற்கு மாற்றுவது சிறந்தது என்ற கோரிக்கையை வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகளிடம் விடுத்திருந்தனர்.

இதன்காரணமாக நாளைய தினத்திலிருந்து திருநெல்வேலி கலாசாலை வீதியில் தற்காலிகமாக இயங்கிய சந்தையானது திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இயங்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமது அன்றாட பணிகளை செய்வதோடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் …

error: Content is protected !!