Breaking News
Home / latest-update / பருப்பில்லாத திடீர் சாம்பார் – பேச்சிலர் சமையல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பருப்பில்லாத திடீர் சாம்பார் – பேச்சிலர் சமையல்

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
  • கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • பச்சை மிளகாய் – ஐந்து
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தக்காளி – நான்கு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவைகேற்ப
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  • பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கிய கலவையில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவும் .
  • நன்கு கொதித்ததும் உப்பு, காரம் பார்த்து தேவையெனில் சேர்க்கவும்.
  • பிறகு கடலை மாவில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி கொதிக்கும் குழம்பில் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது இது.

Check Also

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைட்டில் இருந்து நாடு …

error: Content is protected !!