Breaking News
Home / latest-update / மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர்

தேவையான பொருட்கள் :

  • மரவள்ளிக்கிழங்கு – 200 கிராம்
  • முந்திரி – 20
  • பாதாம் – 25
  • பிஸ்தா – 8
  • ஏலக்காய் – 3
  • ஐஸ் கட்டிகள் – 5
  • சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

  • பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
  • பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.
  • மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, பாதாம், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  • கீர் பரிமாறும் டம்ளரில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி பரிமாறவும்.
  • சூப்பரான மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் ரெடி.

Check Also

யாழ். வடமராட்சி கிழக்கில் இரு இளைஞர்கள் கைது

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். …

error: Content is protected !!