Breaking News
Home / latest-update / ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் ஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்றும் (03) சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் அதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவை நேற்றும் இன்றும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

நேற்றும் இன்றும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியாமல் போன பயனாளிகளுக்கு மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி அதனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தபால் நிலையங்களில் ஓய்வூதிய கொடுப்பனவை பெறும் பயனாளிகளுக்கு அதனை அவர்களது வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் எவரும் தபால் நிலையங்களக்கு வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் நாளைய தினத்திற்குள் குறித்த ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்காத பட்சத்தில் தபால் காரியாலத்தை தொடர்பு கொண்டு கேட்டுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்காக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல் ஓய்வூதியம் வழங்கும் நாளில் சகல மருந்தகங்களையும் திறக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவித்தலுக்கமைய சகல மருந்தகங்களும் இன்று திறக்கப்பட்டிருந்தன.

அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் சமூர்த்தி கொடுப்பனவை பெறுவோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அந்த கொடுப்பனவு தொகை வழங்கப்பட்டது.

இதேவேளை இன்று புறக்கோட்டை மெனிங் சந்தையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றதுடன் மரகறிகளின் விலை குறைவடைந்து காணப்பட்டது.

அதனால் மொத்த வியாபாரிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கு இரண்டு நாட்களுக்கும் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மெனிங் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

Check Also

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி பிரயோகம்..!

மாளிகாவத்தை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் …

error: Content is protected !!