Breaking News
Home / latest-update / பிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரீமியம் விலையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்

ஃபிட்பிட் நிறுவனத்தின் சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிட்பிட் சார்ஜ் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய ஃபிட்பிட் சார்ஜ் 4 மாடலில் பில்ட் இன் ஜிபிஎஸ், ஸ்பாடிஃபை போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்விம் ப்ரூஃப் வடிவமைப்பு, இன்டக்டிவ் பட்டன், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் ஸ்கிரீன், பிரைட், கிரிஸ்ப் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள டிஸ்ப்ளே இயற்கை வெளிச்சமுள்ள சூழலிலும் எளிமையாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஃபிட்பிட் பர்ஸ்பல்ஸ் 24/7 இதய துடிப்பு டிராக்கிங் வசதி, உடற்பயிற்சி, பவர் யோகா, நடைபயிற்சி என பல்வேறு உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

இதுதவிர முன்னதாக ஃபிட்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு அம்சங்கள் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட் வழங்கி உள்ளது.

புதிய ஃபிட்பிட் சார்ஜ் 4 பிளாக், ரோஸ்வுட் மற்றும் ஸ்டாம் புளு/பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் ரிஃப்ளெக்டிவ் / பிளாக் வோவென் பேண்ட் மற்றும் கிளாசிக் பிளாக் பேண்ட் கொண்ட ஃபிட்பிட் சார்ஜ் 4 ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Check Also

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி பிரயோகம்..!

மாளிகாவத்தை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் …

error: Content is protected !!