Breaking News
Home / latest-update / ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முன்னேற்பாடு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய மத்திய வங்கியின் கண்காணிப்பு திணைக்களத்தால் நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகள் ஊடாக குறித்த விடயம் ஆராயப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்காக பல சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இதற்கு முன்னர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வருமான வரி, வற் வரி, வரிப்பணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

அத்துடன் 50 ஆயிரத்திற்கு குறைவான கடனட்டை கட்டணத்தை செலுத்துவம் சலுகை காலம் வழங்கப்பட்டது.

அதேநேரம் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் மாதாந்த தவணை கட்டணத்தை அறவிடுவது 6 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறும் மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கும் குறைவான தனிநபர் கடனை அறவிடுவது 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அறிவித்தது.

எனினும் அரசாங்கத்தால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தி நிதி நிவாரணங்கள் குறித்த வங்கிகள் மூலம் செயற்படுத்தப்படுகிறதா என எமது செய்தி சேவை ஆராய்ந்தது.

இதற்கமைய அரசாங்க வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி உள்ளிட்ட ஏனைய அனைத்து வங்கிகளும் இந்த சலுகைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அத்துடன் அரசாங்க வங்கிகளுடன் தனியார் வங்கிகளும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைகளை தற்போது அமுல்படுத்தி வருகின்றன.

Check Also

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம்….!

நாடு முழுவதும் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் …

error: Content is protected !!